Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவரலாற்று வெற்றியைப் படைத்த ஸ்பெயின் மற்றும் ஜப்பான்...

    வரலாற்று வெற்றியைப் படைத்த ஸ்பெயின் மற்றும் ஜப்பான்…

    கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் ஜப்பான் மற்றும் ஸ்பெயின் வரலாற்று வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

    2022 கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. லீக் சுற்றில் 12 நாள்களுக்குத் தினமும் நான்கு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    கத்தாரில் தற்போது உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிந்து களமிறங்குகின்றன. 

    இதில் நேற்று, குரூப் இ பிரிவில் ஸ்பெயின் மற்றும் கோஸ்டா ரிக்கா அணிகள் மோதியது. பாதி நேர ஆட்டத்திற்குள்ளாகவே ஸ்பெயின் 3 கோல்களை அடித்து அசத்தியது. பின்னர் ஸ்பெயின் மொத்தமாக 7 கோல்களை அடித்தது. இதன்மூலம்,  7-0 என்ற கணக்கில் ஸ்பெயின் கோஸ்டா ரிக்கா அணியை வீழ்த்தியது. 7 கோல்களை அடித்து வெற்றிப் பெற்றதன் மூலம் ஸ்பெயின் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. 

    மேலும், ஜெர்மனி மற்றும் ஜப்பான் மோதிய போட்டியில், நான்கு முறை சாம்பியன்ஷிப் வென்ற ஜெர்மனி இதுவரை ஒருமுறை கூட கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாத ஜப்பானிடம் தோற்றுள்ளது. 2-1 என்ற கணக்கில் ஜப்பான் ஜெர்மனியை வீழ்த்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற மோரோக்கோ மற்றும் க்ரோஷியா போட்டியானது 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது.

    தாம்பரம் – சென்னை ரயில்கள் இரு நாட்களுக்கு ரத்து… முழு விவரம் உள்ளே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....