Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதாம்பரம் - சென்னை ரயில்கள் இரு நாட்களுக்கு ரத்து... முழு விவரம் உள்ளே!

    தாம்பரம் – சென்னை ரயில்கள் இரு நாட்களுக்கு ரத்து… முழு விவரம் உள்ளே!

    சென்னையில் 4 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சென்னையின் போக்குவரத்துகளில் முக்கியமான அம்சமாக பார்க்கப்படுவது, இரயில் பயணம். தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இயல்பாக ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். பலர் ரயிலின் நேரத்தை வைத்துதான் தங்களின் அலுவல்களை திட்டமிடுகின்றனர். 

    இந்நிலையில், நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் சென்னை – தாம்பரம் செல்லக்கூடிய  4 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    நவம்பர் 25, 26-ஆகிய தேதிகளில் தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதால் 4 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    25, 26-ல் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ள ரயில்கள்:
    • இரவு 11.40-க்கு புறப்படும் சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில் (40147).
    • இரவு 11.59-க்கு புறப்படும் சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில் (40149).
    • இரவு 11.20-க்கு புறப்படும் தாம்பரம் – சென்னை கடற்கரை ரயில் (40148). 
    • இரவு 11.40-க்கு புறப்படும் தாம்பரம் – சென்னை கடற்கரை ரயில் (40150).
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....