Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலைக்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை முடிவு

    கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலைக்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை முடிவு

    திருவண்ணாமலை தீபத்திருவிழா அன்று 2700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

    திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக பக்தர்கள் செல்லாத நிலை இருந்தது. ஆனால் தற்போது பக்தர்கள் கூட்டம் தீபத் திருவிழா அன்று அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, டிசம்பர் 6ம் தேதி மகாதீப பெருவிழா நடைபெற உள்ளது. இந்த
    தீபத்திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இலட்சக்கணக்கான பொதுமக்கள் வருவது வழக்கமான ஒன்றாகும்.
    பொதுமக்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.

    டிசம்பர் 6-ம் தேதி மட்டும் 25 லட்சம் பக்தர்களும், மகா தேரோட்டத்தின் போது 5 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 7ம் தேதி பொளர்ணமியும் வரவுள்ளது. இதன்காரணமாக சிறப்பு பேருந்துகளை டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும்
    பொதுமக்களின் வருகையை பொருத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    தாம்பரம் – சென்னை ரயில்கள் இரு நாட்களுக்கு ரத்து… முழு விவரம் உள்ளே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....