Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன்... மருத்துவ நிர்வாகம் அறிக்கை

    திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன்… மருத்துவ நிர்வாகம் அறிக்கை

    சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார்.

    உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துவருகிறார். இடையில் சிறிதுகாலம் நின்ற இந்தியன்-2 வின் படப்பிடிப்பு விரைவாக நடந்துவருகிறது. இந்தப் படப்பிடிப்பு மட்டுமில்லாமல், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். 

    இச்சூழலில்தான், கடந்த ஞாயிறன்று ஹைதராபாத் சென்ற கமல்ஹாசன், மூத்த இயக்குநர் கே.விஸ்வநாதன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். இதன்பின், சென்னை திரும்பிய அவர், உடல் வழக்கத்திற்கு மாறாக சோர்வாக இருப்பதாக உணர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசன் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இலேசான காய்ச்சல் காரணமாக நேற்று இரவு நடிகர் கமல் ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சையில் அவர் தற்போது நலமாக உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், தற்போது நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாக குறிப்பிடத்தக்கது.

    சாப்பாட்டு ‘பில்லை’ டிரெண்ட் ஆக்கிய நெட்டிசன்கள்; அப்படியென்ன இருக்கு அதுல?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....