Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்நிலநடுக்கத்தில் சிக்கிய சிறுவன்; இரு நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம்...

    நிலநடுக்கத்தில் சிக்கிய சிறுவன்; இரு நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம்…

    இந்தோனேஷியா நிலநடுக்கத்தில் இரண்டு நாள்களுக்குப் பிறகு சிறுவன் ஒருவன் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்தோனேஷியாவில் கடந்த திங்கட்கிழமை மேற்கு ஜாவா மாகாணம், சியாஞ்சூர் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், இதுவரையில் 271 பேர் பலியாகியுள்ளச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த நிலநடுக்கத்தால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், 50,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 2,000-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாக்ரக் என்ற கிராமத்தில் புதன்கிழமை மாலை இடிபாடுகளில் சிக்கியிருந்த சடலத்தை மீட்புப் படையினர் மீட்கும்போது சடலத்திற்கு கீழே அஸ்கா மௌலானா மாலிக் என்ற 6 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அந்தச் சிறுவன் இரண்டு நாள்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் அவரது பாட்டியின் சடலத்திற்கு கீழே இருந்தார். 

    இரு நாட்களுக்குப் பிறகு சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சிறிய நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும், இச்சம்பவம், பலர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையுடன் மீட்புப் பணியை, மீட்புப் படையினர் தொடர்ந்து வருகின்றனர்.

    தாம்பரம் – சென்னை ரயில்கள் இரு நாட்களுக்கு ரத்து… முழு விவரம் உள்ளே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....