Sunday, March 24, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்சாப்பாட்டு 'பில்லை' டிரெண்ட் ஆக்கிய நெட்டிசன்கள்; அப்படியென்ன இருக்கு அதுல?

    சாப்பாட்டு ‘பில்லை’ டிரெண்ட் ஆக்கிய நெட்டிசன்கள்; அப்படியென்ன இருக்கு அதுல?

    ‘இந்த பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கெடச்சுது’- னு ஒரு நல்ல ஹோட்டலை தேடிப்போய் உட்கார, சர்வர் மெனு கார்டை எடுத்து வந்து தருகிறார். ‘இன்னைக்கு ஒரு கட்டு கட்டுறோம்’ அப்படினு மெனு கார்டை ஓப்பன் செய்தால், அவ்வளவுதான். நாம கண்ட கனவுல ஆசிட் ஊத்துன மாதிரி, ஒவ்வொரு டிஷ்ஷோட விலையும் ஹார்ட் அட்டாக் தர அளவுக்கு ஷாக்கிங்-ஆ இருக்கு. அப்புறம் என்ன? நமக்கு எது வாய்ச்சுதோ..நமக்கு எது கட்டுபிடி ஆகுதோ..அதை சாப்பிட்டு வராத ஏப்பத்தை வரவைத்துவிட்டு ஹோட்டலை விட்டு வெளியே நகர்கிறோம். 

    இப்படியான சூழலில்தான் தற்போது பலரும் சிக்கிக்கொண்டுள்ளோம். ஹோட்டல்களில் உணவுகளோட விலையென்பது தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே செல்கிறது. ‘அண்ணே..எண்ணணே’ என்று கேட்டால், ‘விலைவாசி ஏறுதில்லப்பா’ என்றே பதிலே கிடைக்கிறது. ‘விலைவாசி ஏறுது ஆனா இந்த சம்பளம் மட்டும் ஏறமாட்டுதே’-னு புலம்புகிறவர்கள் பலர். 

    சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் மேற்கூறிய மனநிலையில் இருக்க,  அவர்களிடம் வந்து சிக்கியது ஒரு பில். 1985-ஆம் ஆண்டில் யாரோ ஒருவர் சாப்பிட்டதற்கான பில்தான் அது. இதைக்கண்ட நெட்டிசன்கள் திகைத்துப்போயினர். 

    அதோடு, ‘டைம் டிராவல் மெஷின் இருந்தா கொண்டு வாங்கப்பா..1985-க்கு போகலாம்’ என்றும், ‘அது ஒரு அழகிய காலம்’ என்றும், ‘இனி அதுக்குலாம் வாய்ப்பே இல்ல’ என்றும் பல்வேறு கமெண்டுகள் அந்த பில் குறித்து எழுந்து வருகின்றன. 

    அந்த பில்லின்படி, 1985-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி டெல்லியில் உள்ள லாஸிஸ் உணவகத்தில் ஒருவர், சாஹி பன்னீர், தால் மக்னி, ரைட்டா மற்றும் சில சப்பாத்திகளை ஆர்டர் செய்துள்ளார். இவ்வளவு ஆர்டர் செய்தும் அவரது பில் 26 ரூபாய்தான் வந்துள்ளது. இதனால்தான், தற்போது நெட்டிசன்கள் திகைப்பில் உள்ளனர். 

    பில்

    நெட்டிசன்களின் இந்த திகைப்பால், அந்த ‘பில்’ சமூகவலைதளங்களில் மாபெரும் டிரெண்ட் அடித்து வருகிறது.

    கொலை நிகழ்த்தியவனின் புத்திசாலித்தனம் கதை முழுக்க நம்மை வியக்க வைக்கிறது – சல்யூட் திரைப்பார்வை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....