Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்கொலை நிகழ்த்தியவனின் புத்திசாலித்தனம் கதை முழுக்க நம்மை வியக்க வைக்கிறது - சல்யூட் திரைப்பார்வை!

    கொலை நிகழ்த்தியவனின் புத்திசாலித்தனம் கதை முழுக்க நம்மை வியக்க வைக்கிறது – சல்யூட் திரைப்பார்வை!

    குற்ற உணர்வு என்ற ஒன்று இல்லையென்றால், மனிதன் பல்வேறு கொடுஞ்செயல்களைச் செய்ய துணிவான். இந்த கூற்றை மறைமுகமாக கொண்டு இயங்கிய திரைப்படம்தான், சல்யூட்.

    துல்கர் சல்மான், மனோஜ் கே ஜெயன் ஆகியோர் நடிப்பில் நேரடி ஓடிடி திரைப்படமாக வெளிவந்துள்ளது, சல்யூட். 36 வயதினிலே திரைப்படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். மேலும் சல்யூட் திரைப்படத்தை துல்கர் சல்மான் அவர்களே தயாரித்துள்ளார். 

    முன் கதை 

    தனது அண்ணனை முன்மாதிரியாகக் கொண்டு காவல்துறையில் சேர்ந்தவராய் இருக்கிறார், அரவிந்த் கருணாகரன். தனது அண்ணனின் தலைமையின் கீழ் உள்ள காவலர் குழுவில் அரவிந்த் கருணாகரனும் இடம்பெறுகிறார். 

    அச்சமயம் ஊரில் ஒரு கொலை நிகழ்கிறது. பின்பு, அந்த கொலையை யார் செய்தார் என்று விரைவில் கண்டுபிடித்தாக வேண்டும் என்ற இக்கட்டுக்கு காவல்துறை உள்ளாகிறது. அண்ணணின் தலைமையிலான குழுவில் இடம்பெற்றவர்கள், கொலை செய்ததாக ஒரு குறிப்பிட்ட நபரைக் கண்டுபிடித்து கைது செய்ய முற்படுகிறார்கள். 

    அரவிந்த் கருணாகரன் ‘இல்லை, கொலை செய்தது இவராக இருக்காது’ என்று கூறினாலும், ஆதாரங்கள், குழு கைது செய்ய ஆர்வம் காட்டிய அந்நபருக்கு எதிரானதாகவே இருக்கிறது.

    மேலும், அண்ணன் காதாப்பாத்திரம் காவல்துறைப் பற்றி விளக்கி கூறியப்பின், அரவிந்த் கருணாகரனும் அந்நபரை கைது செய்ய ஒத்துழைக்கிறான். கைது வெற்றிகரமாக அரங்கேறுகிறது.

    salute

    கைது நிகழ்வு முற்றிலுமாய் முடிந்தப்பின், அரவிந்த் கருணாகரனுக்கு மற்றொரு நபர் மீது சந்தேகம் வருகிறது. ஆனால், அரவிந்த் இடம்பெற்றிருக்கும் குழுவானது இந்த கொலைப்புகார் முடிந்துவிட்டது என்றும், கொலையாளியை கைது செய்தாயிற்று என்றும் தெரியப்படுத்துகிறது. இதற்கு மேல் வேறு நபர் யாரையும் கண்டுப்பிடித்தால் கூட அது நம் பணிக்குத்தான் பிரச்சினை என்றும் தெரியப்படுத்துகின்றனர். 

    இவர்களின் பேச்சையும் மீறி, கொலைப்பற்றிய ஆய்வுகளை அரவிந்த் கருணாகரன் மேற்கொள்ள, அவனது அண்ணனின் மூலமாகவே பல்வேறு இன்னல்கள்  அரவிந்த் கருணாகரனுக்கு தரப்படுகிறது.

    இதனால் ஒரு கட்டத்தில் கொலையைப் பற்றி விசாரிப்பதை பாதியிலேயே விட்டுவிட்டு வருட கணக்கில் விடுமுறை எடுத்து அயலூர் செல்கிறார், அரவிந்த் கருணாகரன். இருப்பினும், கொலை செய்யாத ஒருவனை கைது செய்து விட்டோமே என்ற குற்ற உணர்வு பலமாக அரவிந்த் கருணாகரனிடத்தில் இருந்தது.

    சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அரவிந்த் கருணாகரன் சொந்த ஊருக்கு வர, அந்த கொலைப்பற்றி மீண்டும் ஆய்வுகளை நிகழ்த்துகிறான். கொலை செய்தது யார்? எதற்காக கொலை அரங்கேறியது? குற்ற உணர்வு விட்டதா? இவர்களின் பணி என்னானது? கொலை செய்தவன் கைதாகிட்டானா என் முக்கியமான கேள்விகளின் பதில்களை நோக்கித் திரைக்கதை நகர்கிறது. 

    அம்சங்கள்  

    இத்திரைப்படத்தில் மிக முக்கியமான அம்சம் திரைக்கதைதான். கொஞ்சம் கொஞ்சமாக நம்மை உள்ளீழுத்து, பின் நம்மையும் கதையினூடே பயணிக்க வைத்துவிடுகிறது, திரைக்கதை. பாபி மற்றும் சஞ்சய் என்ற இரு எழுத்தாளர்களும் திரைப்படத்தை தாங்கிப்பிடித்துள்ளனர் என்பதே உண்மை. 

    ஒரு கொலையாளியைத் தேடிச்செல்ல, அப்பயணத்தில் கிடைக்கும் விடயங்கள், அக்கொலையோடு சமந்தப்பட்ட மற்ற செயல்கள் என அனைத்தும் மிக எளிதானதாகவும் அதனால் நேர்ந்தவைகள் பெரியதாகவும் இருக்கும் நிகழ்வு இப்படத்தில் உள்ளது. 

    எளிதானவைகள் என்றாலும், அதை நிகழ்த்தியவனின் புத்திசாலித்தனம் கதை முழுக்க நம்மை வியக்க வைத்தே வருகிறது. ஒவ்வொரு முறை அருகில் சென்று திரும்பும் போதும் துல்கரின் உணர்வு நமக்கும் தொற்றிக்கொள்கிறது. குற்ற உணர்ச்சியின் அவசியத்தை துல்கரின் கதாப்பாத்திரம் பேசியிருக்கும் விதம் மறைமுக அழகியல். 

    salute

    மிகவும் துடிதுடிப்பாய், கம்பீர தோற்றம் கொண்டவராய் காக்கி உடையில் திகழ்கிறார், துல்கர். இப்படத்தில் துல்கரிடத்தில் தோன்றும் பரிணாமங்கள் வசீகரிக்க கூடியவையாக இருக்கிறது. துல்கருக்கு சக காவலர்களால் இன்னலுக்கு உள்ளாக்கப்படும் காட்சிகளும் அதற்கு துல்கர் தரும் பதில்களும் மாஸ் காட்சிகளாக உள்ளன. 

    குரூப் திரைப்படத்தில் திருடனாக, சல்யூட் திரைப்படத்தில் காவல்துறையாக துல்கர் துவம்சம் செய்திருக்கிறார் என்றே கூற வேண்டும். மேலும், இத்திரைப்படத்தின் ஒரு கட்டத்தில் அரவிந்த் கருணாகரன், குரூப்பை துரத்துகிறாரோ என்ற கேள்வியை சல்யூட் விதைத்துவிடுகிறது.

    பரவும் காட்டுத்தீ 

    திரைக்கதை ஒரு குறிப்பிட்ட இடங்களில் தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டிருப்பது, திரைப்படம் மெதுவாக நகர்கிறதோ என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. 

    மெதுவாக பரவும் காட்டுத்தீயாக சல்யூட் திரைப்படத்தின் திரைக்கதை பார்ப்பவர்களை உள்ளீழுக்கும். வித்தியாசமான அனுகுமுறையை இத்திரைப்படம் தன்னுள் இறுதி வரை வைத்திருக்கிறது. மேற்கூறிய அனைத்தினோடு, புதிய அனுகுமுறை ஒன்று சேர்ந்து திரைப்படமானது இன்னொரு படிக்கு நகர்கிறது. அந்த புதிய அனுகுமுறை என்னவென்பது திரைப்படம் முடிகையில் நீங்கள் அறிவீர்கள். 

    திரைப்படம் சோனி லைவ்-வில் ஓடிக்கொண்டிருக்கிறது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....