Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇன்றைய ஐபிஎல் போட்டியில் எந்த அணியின் வெற்றிப் பயணம் தொடரும்? - ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு!

    இன்றைய ஐபிஎல் போட்டியில் எந்த அணியின் வெற்றிப் பயணம் தொடரும்? – ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு!

    நடைபெற்றுக் கொண்டிருக்கும் 15 ஆவது ஜபிஎல் திருவிழாவில் இன்று 13 ஆவது போட்டி நடைபெற உள்ளது.  இப்போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகள் மோதவிருக்கின்றன. 

    ராஜஸ்தான் ராயல்ஸ் 

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரையில், சஞ்சு சாம்சன் தலைமையில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இதுவரை விளையாடியுள்ள இரு போட்டிகளிலுமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

    ஆதலால், இன்று நடைபெற இருக்கும் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி உத்வேகத்துடன் களமிறங்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    ராயல் சேலஞ்சர்ஸ் 

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைப் பொறுத்தவரையில், இதுவரை விளையாடிய இரு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியையும் கண்டுள்ளது.

    ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் போட்டியை விட கடந்த போட்டியில் சிறப்பாகவே செயல்பட்டது.

    சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக வெற்றியும் வந்தடைந்தது. அந்த வெற்றி தந்த வேகத்திலும், நம்பிக்கையிலும் இன்றையப் போட்டியில் பெங்களுர் அணியானது களமிறங்க உள்ளது. 

    ஒப்பீடு 

    மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பட்லர் சதம் அடித்தது அபாராமாக இருந்தது. ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை சக்தி வாய்ந்ததாகவே இருக்கிறது.

    ராஜஸ்தான் அணியின் பேட்டிங் மிகவும் பலமாக உள்ளது. இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலுமே, ராஜஸ்தான் அணியானது அதிக ரன்களைக் குவித்துள்ளது. இதனால்,  ராஜஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டரை சிதறடிப்பதென்பது பெங்களூர் அணிக்கு அத்தியாவசியமாகிறது.  

    இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 24 முறை மோதியிருக்கின்றன. அவற்றில் 12 போட்டிகளில் பெங்களுர் அணியும், 10 போட்டிகளில் ராஜஸ்தான் அணியும் வெற்றிப்பெற்றுள்ளது. இரு போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.

    இப்போட்டியானது, மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு  7:30 மணியளவில் தொடங்க உள்ளது. 

    ராஜஸ்தான் அணி; 

    ஜோஸ் பட்லர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கே&வி ), தேவ்டட் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், நவ்தீப் சைனி, டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.

    பெங்களூர் அணி; 

    டு பிளெசிஸ்(கே), அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக்(வி), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....