Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இவர் தான் பிரதமர் ! ஆனா இவர் கிடையாது ! பிரதமர் பதவியை இழந்தாரா இம்ரான்...

    இவர் தான் பிரதமர் ! ஆனா இவர் கிடையாது ! பிரதமர் பதவியை இழந்தாரா இம்ரான் கான் ?

    பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், அடுத்த பாதுகாப்பு பிரதமர் அறிவிக்கப்படும் வரை இம்ரான் கானே பதவி வகிப்பார் என்ற உத்தரவால் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். 

    பாகிஸ்தானில் சமீப காலங்களாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்தை எட்டி வந்தது. பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயுக்களின் விலையும் உச்சத்தை எட்டி மக்கள் நிதிநெருக்கடிக்கு உள்ளாகினர். ஆனால், இதுகுறித்து பிரதமர் இம்ரான் கான் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தார். 

    இந்நிலையில் அவருக்கு எதிராக அவருடைய எதிர்கட்சியினரும், ஒரு சில இம்ரான் கானின் கூட்டணி கட்சியினரும் ஒன்று கூடினர். நாடாளுமன்றம் நோக்கி மிகப்பெரிய எதிர்ப்பு நடைப்பயணமும் நடத்தப்பட்டது. இந்நிலையில் அவருக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் எடுக்கப்பட்டது. 

    ஆனால் அந்த தீர்மானம் தோல்வியில் முடிந்தது. இவ்வாறு தனக்கு ஏதிரான நம்பிகையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற முயன்றதால் நாடளுமன்றத்தை கலைக்க வேண்டி அந்த நாட்டின் அதிபர் ஆரிப் அல்விக்கு கடிதம் எழுதினார் பிரதமர் இம்ரான் கான். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அதிபர்  ஆரிப் அல்வி நாடாளுமன்றத்தைக் கலைத்து 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்த உத்தரவிட்டார். 

    இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான எதிர்க்கட்சிகள் உச்சநீதி மன்றத்தை நாடி தங்களது கோரிக்கைகளையும், குற்றசாட்டுகளையும் முன்வைத்தனர். இந்நிலையில் அமைச்சர்கள் அவையின் செயலாளர் பரபரப்பை கிளப்பும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் இம்ரான் கான் பதவியை இழக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

    அதாவது, அமைச்சரவை மொத்தமாக கலைக்கப்பட்டுள்ளதால் இம்ரான் கான் தானாகவே தன்னுடைய பதவியை இழக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பாகிஸ்தானில் மேலும் குழப்பம் நிலவியது. இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் அதிபர் ஆரிப் அல்வி அடுத்த அறிக்கையை வெளியிட்டார். 

    அந்த அறிக்கையில் அடுத்த பாதுகாப்பு பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, பழைய பிரதமர் இம்ரான் கானே பதவியில் நீடிப்பார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படி இருவேறு அறிக்கைகள் தொடர்ந்து வந்ததால் பாகிஸ்தானின் அரசியல் நிலை கேள்விக்குறிக்கு உள்ளாகி உள்ளது. இந்த அறிவிப்பால் எதிர்க்கட்சிகளும் கடும் அதிருப்தியில் உள்ளன. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....