Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்1000-க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக 'ஜூம்' நிறுவனம் அறிவிப்பு!

    1000-க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக ‘ஜூம்’ நிறுவனம் அறிவிப்பு!

    பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜூம் நிறுவனம், 1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    உலகளவில் முக்கிய நிறுவனங்களாக பார்க்கப்படும் அமேசான், மைக்ரோசாஃப்ட், ட்விட்டர், ஸ்விக்கி, மெட்டா  போன்ற நிறுவனங்கள் சமீபகாலமாக தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. வரவுள்ள பணவீக்கத்தை எதிர்கொள்ளவே நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. 

    இந்நிலையில், ஜூம் செயலியின் 1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  ஜூம் செயலி கொரோனா காலக்கட்டத்தில் பலருக்கும் உதவிகரமாக இருந்தது. 

    மேலும், தொழில்நுட்ப நிறுவனங்களில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் பணிநீக்க நடவடிக்கைகளால் ஊழியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். முன்னதாக, இந்தாண்டு தொடக்கத்தில், கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் உலகம் முழுவதும் தனது 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ரஜினிகாந்த் மோகன்லால் சந்திப்பு; இணையத்தில் வைரலான புகைப்படம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....