Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ரஜினிகாந்த் மோகன்லால் சந்திப்பு; இணையத்தில் வைரலான புகைப்படம்!

    ரஜினிகாந்த் மோகன்லால் சந்திப்பு; இணையத்தில் வைரலான புகைப்படம்!

    நடிகர் ரஜினிகாந்தும், நடிகர் மோகன்லாலும் சந்தித்துக்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், மோகன்லால், சிவ்ராஜ்குமார், சுனில் மற்றும் தமன்னா போன்றோர் நடித்து வருகின்றனர். 

    ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதே இடத்தில் லிஜோ இயக்கத்தில் உருவாகி வரும் மோகன்லால் நடிக்கும் மற்றொரு திரைப்படமான ‘மலைக்கோட்டை வாலிபன்’ படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், படப்பிடிப்புக்கு இடையே ரஜினிகாந்தும் மோகன்லாலும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது, மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரும், செஞ்சூரி பிக்சர்ஸ் நிறுவனருமான கொச்சுமோனும் உடனிருந்துள்ளார். இச்சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    jailer

    சமீபத்தில், ஜெயிலர் படத்தில் பிரபல நடிகர் ஜாக்கி ஷெராஃப் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    காதல் மாதம்; இவையெல்லாம் அவசியமா? – இன்றைய ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....