Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைகாதல் மாதம்; இவையெல்லாம் அவசியமா? - இன்றைய ஸ்பெஷல்!

    காதல் மாதம்; இவையெல்லாம் அவசியமா? – இன்றைய ஸ்பெஷல்!

    பிப்ரவரி என்றாலே காதல் மாதம் என்றுதான் பலருக்கு பரிட்சயம். காரணம், பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதியை வரவேற்கும் பொருட்டு, அதற்கு முன்னம் இருக்கும் ஏழு நாட்களையும் பிரத்யேக உணர்வுகளுக்காக, பிரத்யேக நிகழ்வுகளுக்காக மனித சமுதாயம் தயார் செய்துள்ளது.

    la-la-land

    வாழ்வு ஆனந்தத்திற்கு உரிய ஒன்று ஆனால் அனைவருக்கும் அனைத்து நாட்களிலும் வாழ்வு அப்படியானதாக இல்லை, இருக்கவும் வாய்ப்பில்லை. வாழ்வின் ஆனந்த தருணங்களில் மிக முக்கியமான ஒன்று காதல் வயப்படுவது! காதலின் ஆரம்ப தருணங்களில் பகிரப்படும் உணர்வுகளுக்கு வாழ்வின் இறுதிவரை தனிப்பட்ட இடம் உண்டு. குறிப்பாக ஒரு தலையாக காதல் மலரும்போது, தனிப்பட்ட நபருக்குள் நிகழும் உணர்வுகள் விந்தையானவை. ஆனால் மகிழக்கூடியவை!

    LOVE

    பலர் சொல்ல கேட்டிருப்போம், ஒரு தலை காதல் சிறந்தது என்று! இப்படி சொல்பவர்களில் பலரின் பின் சென்று பார்த்தால் அவர்களின் காதல் ஏற்கபடாமல் இருந்து இருக்கும். நிராகரிப்பு நிகழ்ந்த உடன் அதுவரையிலான காதல், சிலருக்கு தேக்கம் பெறுகிறது, சிலருக்கு நதியாகிறது, சிலருக்கு வன்மமாய் மாறுகிறது. 

    HAPPY

    தேக்கத்தில் நிராகரிப்பு நிகழ்ந்த பின் வேறு நபரின் மீது காதல் வயப்படாமல் இருப்பர், நதியில் மீண்டும் காதல் நேரும், வன்மத்தில் பல கொடிய விளைவுகள் ஏற்படும். காதல் உடனடியாக வன்மமாய் மாறும் நிகழ்வு மனித மனங்களை தொடர்ந்து ஆச்சரியப்படுத்துகிறது. காதல் கடலில் இருந்துக்கொண்டு, திடீரென மனித மனம் எவ்வாறு வன்மம் எனும் ஆகாயத்திற்கு தாவுகிறது என தெரியவில்லை. காதலித்த இணையை துன்புறுத்தியே தீர வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் எங்கிருந்து வருகிறதென ஆராய்ந்து, அந்த எண்ணத்தின் வேரை அறுத்தெரிய நாம் முயல வேண்டும்.

    LOVE

    மேல் சொன்னவைகள், இன்று ஏன் சொல்லப்படுகிறது என்று யோசித்தால், பிப்ரவரி 8 ஆம் தேதியான இன்று புரோபஸல் டே கொண்டாடப்படுகிறது. காதலை தெரிவிக்கும் தினமாக பலராலும் இந்நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழிமொழியப்படுகிறது.

    இவையெல்லாம், அவசியமா என்றால்..அது தனிப்பட்ட நபர்களின் விருப்பம்!  இருப்பினும் கவிஞர் ரூமியின் கவிதை ஒன்றை இங்கு நினைவு கூறலாம்l:

    அன்பில் முட்டாள் தனமாய் இருங்கள்; ஏனென்றால்,

    அந்த அன்பில்தான் எல்லாமும் இருக்கிறது.

    உள்ளுக்குள்ளேயே புதைந்திருந்த காதல்கள், அருகில் இருந்தும் தெரிவிக்கப்படாமல் இருந்த காதல்கள், நிராகரிப்பின் பயத்தினால் கூற முடியாமல் இருந்த காதல்கள், காதல் அறிந்தும் தெரிந்தும் தன் இணையிடம் தெரிவிக்காத காதல்கள் என பலவும் இன்று சுதந்திரமாய் யார் யாரிடம் போய் சேர வேண்டுமோ அவர்களிடத்தில் அன்பின் பறவையாய் சென்று சேரும்! சேரட்டும்! 

    ரோஸ் டே: சொல்லப்படும் காரணங்கள், ‘கிரிஞ்ச்’ என்ற கொல்லி… அனைத்தையும் மீறி பூக்கும் காதல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....