Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பெங்களூருவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஸ்டிக்கர் ஒட்டிய கார் மோதி விபத்து; 2 பேர் பலி

    பெங்களூருவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஸ்டிக்கர் ஒட்டிய கார் மோதி விபத்து; 2 பேர் பலி

    பெங்களூருவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஸ்டிக்கர் ஒட்டிய கார் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.  

    கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஹர்டலு ஹலப்பா ஸ்டிக்கர் ஒட்டிய கார் அருகில் இருந்த இருசக்கர வாகனங்களின் மீது மோதியது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் மோகன் என்பவர் கைது செய்யப்பட்டார். 

    பிறகு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்தக் கார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஹர்டலு ஹலப்பாவுக்கு சொந்தமானது இல்லை என தெரியவந்தது. மேலும், அந்தக் கார் வனத்துறை அதிகாரி ராமு சுரேஷுக்கு சொந்தமானது என்றும், இவர் ஹலப்பாவின் மகளுடைய மாமனார் என்பதும் அவரை அழைத்துவர சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் ஓட்டுநர் மோகன் தெரிவித்தார். 

    சிக்கனலில் காரை நிறுத்த பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்துவிட்டதால், முன்னால் நின்ற வாகனங்களின் மீது மோதிவிட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். 

    ‘தமிழ்நாடு ஆளுநர் மசோதாவை கிடப்பில் போட்டிருப்பது குறித்து கருத்து கூற இயலாது.’ – மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....