Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கமலா ஹாரிஸின் கணவரின் உதட்டில் அதிபர் பைடனின் மனைவி ஜில் முத்தம்; வைரலான காணொளி

    கமலா ஹாரிஸின் கணவரின் உதட்டில் அதிபர் பைடனின் மனைவி ஜில் முத்தம்; வைரலான காணொளி

    அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் கணவரின் உதட்டில் அதிபர் பைடனின் மனைவி ஜில் முத்தமிட்ட காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் அந்நாட்டு அதிபர் நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டின் உரையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆற்றினார். 

    அப்போது, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் கணவரின் உதட்டில் அதிபர் பைடனின் மனைவி ஜில் முத்தமிட்டார். இதனைக் கண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிது நேரம் நடப்பது என்னவென்று அறியாமல் இருந்தனர். 

    இருவரும் கட்டி தழுவவே இருக்கையில் இருந்து எழுந்தனர். அப்போது இருவரில் ஒருவர் தவறாக அருகில் வர இறுதியில் ஜில் அவருக்கு முத்தம் கொடுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கை கொடுத்து ஜில் பைடன் வாழ்த்துகளை பரிமாறினார். 

    இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் முன்னாள் ஆலோசகர் கெல்லியன் கான்வே, இந்தப் புகைப்படத்தை பகிர்ந்து, ‘வாவ் கொரோனா முடிந்துவிட்டது’ என பதிவிட்டுள்ளார். 

    பெங்களூருவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஸ்டிக்கர் ஒட்டிய கார் மோதி விபத்து; 2 பேர் பலி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....