Thursday, March 21, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபொது இடங்களில் சில்லறை வழங்கும் இயந்திரங்கள்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    பொது இடங்களில் சில்லறை வழங்கும் இயந்திரங்கள்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    பொது இடங்களில் க்யூஆர் கோடு அடிப்படையில் சில்லறை வழங்கும் இயந்திரங்கள் வைக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

    மக்களிடையே சில்லறை புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்களில் க்யூஆர் கோடு அடிப்படையில் சில்லறை வழங்கும் இயந்திரங்கள் வைக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. 

    இதன்படி, நாடு முழுவதும் முதற்கட்டமாக 12 நகரங்களில் சில்லறை நாணயங்கள் மட்டுமே வழங்கும் இயந்திரங்களை ரயில் நிலையங்கள், பொழுதுபோக்குக் கூடங்கள், சந்தைப் பகுதிகளில் வைக்கப்பட இருக்கின்றன. 

    வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை யுபிஐ பரிவர்த்தனை மூலம் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடான சில்லறை நாணயங்களை வழங்கும் வகையில் இந்த சில்லறை வழங்கும் இயந்திரம் வடிவமைக்கப்பட உள்ளது. 

    இந்த இயந்திரத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் எந்த மதிப்புள்ள நாணயம், எத்தனை வேண்டும் என்பதை தேர்வு செய்து பெற்றுக்கொள்ளலாம் என சொல்லப்படுகிறது. 

    சோதனை முறையில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்தத் திட்டம் வெற்றிப்பெற்றால், மேலும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ‘காங்கிரஸ் வினைகள் அவர்களைச் சுடும்’ – காங்கிரஸ் மீது பிரதமர் மோடி சாடல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....