Tuesday, May 16, 2023
மேலும்
    Homeதொழில்நுட்பம்ஆன்ட்ராய்டு போன்களில் புதுஅம்சத்தை வெளியிடப்போகும் யூடியூப் : என்ன தெரியுமா ?

    ஆன்ட்ராய்டு போன்களில் புதுஅம்சத்தை வெளியிடப்போகும் யூடியூப் : என்ன தெரியுமா ?

    கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஷேரிங் மற்றும் சமூக வலைத்தளமான யூடியூப் இன்று மொபைல் போன் மற்றும் டெஸ்க்டாப்களில் ஒரு முக்கிய வீடியோ பார்ப்பது மற்றும் பகிர்வது தொடர்பான செயலியாக உள்ளது. புதுப்புது அப்டேட்டுகள் மற்றும் ஆப்ஷன்கள் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வரும் இந்நிறுவனம் சில நாட்களுக்கு முன்பாக டெஸ்க்டாப் தளத்தில் ட்ரான்ஸ்கிரிப்ஷன் எனும் புது ஆப்ஷனை அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் மூலம் வீடியோக்களை எழுத்து வடிவில் பார்த்து கொள்ளலாம். இந்த புதிய ஆப்ஷன் ஆனது இவ்வளவு நாள் டெஸ்க்டாப் தளத்தில் மட்டுமே இயங்கி வந்தது. 

    Youtube

    ஆனால் இந்த புதிய ஆப்ஷன் இனிமேல் ஆன்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தப்படும் யூடிப்பிலும் அறிமுகப்படுத்தப்போகிறது யூடியூப் நிறுவனம். இந்தத் தகவலை மொபைல் போன்கள் பற்றிய தகவல்களை வெளியிடும் ஜிஎஸ்ம் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

    youtube tranciription option

    டெஸ்க்டாப்பில் உள்ளது போலவே மொபைல் போனிலும் இந்த ஆப்ஷன் வீடியோவின் மூலையில் உள்ள மூன்று பட்டன்களைத் தொட்டால் “ஷோ டிரான்ஸ்கிரிப்ஷன்” என்று இருக்கும். இதன் மூலம் வேறு தெரியாத மொழியில் உள்ள வீடியோக்களைக் கூட ஆங்கிலத்தில் ட்ரான்ஸ்கிரிப்ஷன் ஆப்ஷனைப் பயன்படுத்தி பார்க்கலாம். இந்த புதிய ஆப்ஷன் மூலம் நீண்ட பெரிய வீடியோக்களை மிக எளிதாக பார்க்கலாம். இது யூடியூப் பயனாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று உள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....