Tuesday, March 19, 2024
மேலும்
    Homeவாழ்வியல்அமைதியாக இருக்க வழி தேடும் உங்களுக்காக! இதோ!

    அமைதியாக இருக்க வழி தேடும் உங்களுக்காக! இதோ!

    எதற்கு எடுத்தாலும் கோபம் வருகிறதா? அமைதியாக இருக்க வழி தேடும் உங்களுக்காக தான் இந்தப்பதிவு, இனி இப்படி இருந்து பாருங்கள் அமைதியாய் இருப்பவர்களைப் போன்று,

    • அமைதியான நபர் அன்றாட நடைமுறைகளை மட்டுமே செய்வார். அதில் தான் அவரின் அமைதி ஒளிந்துள்ளது. தான் என்னென்ன வேலைகள் எப்போது செய்ய வேண்டும் என்பதை முன்னரே குறித்து வைத்துக் கொள்வார்.
    • அமைதியாய் இருக்கும் நபர் தான் செய்யும் வேலைகளில் கவனமுடனும் தெளிவுடனும் இருப்பார். ஆனால் உலகத்தையே நான் தான் பெரிய வேலைக்காரன் என்ற எண்ணமும் திமிரும் சிறிதும் இருக்காது. உலகத்தின் சிறிய இடத்தையே அமைதியானவர் விரும்புவர்.
    • அமைதியான நபர் தான் செய்கின்ற வேலையை விரும்பிச் செய்வார். சமைத்தல், வரைதல், எழுதுதல், தோட்ட பராமரிப்பு என அது எந்த வேலையாய் இருந்தாலும் ஈடுபாடுடன் செய்வார். gardening
    • அமைதியான நபர் பொதுவாகவே அவசரப்படுவதை விரும்ப மாட்டார். காரணம் அதற்கு முன்னேற்பாடுகளைச் செய்வார். ஆகையால் முன்னேற்பாட்டுடன் இருங்கள் அவசரத்தை தவிருங்கள். 
    • வாழ்வில் சில சுய கட்டுப்பாடுகளுடனும் ஆரோக்கியமான முறையிலும் அமைதியை விரும்புவர் வாழ்வர். மேலும் இவர்கள் வேலையின் போது தகுந்த இடைவெளிகளை எடுத்துக் கொள்வர். அது வேலையாகவும் இருக்கலாம் இல்லை எந்த செயலாகவும் இருக்கலாம். 
    • பொதுவாக அமைதியான நபர் தமக்கு பிடித்த இடத்திற்கு தனியாகவோ அல்லது பிடித்த நபருடனோ நடந்துச் செல்வார். நிச்சயம் நீங்கள் இப்படி செய்து பாருங்கள். நடப்பது மனதுக்கு மட்டுமல்ல உடலுக்கும் மிக நல்லது. peaceful walking
    • உலகத்துடன் ஒத்தும் எதிரியாக இருந்தாலும் அன்போடு நடந்தும் கொள்வார் அமைதியை விரும்புவர். மேலும் எந்த சூழ்நிலையிலும் பணத்தையோ பொருளையோ நம்பிப் பழக மாட்டார்.
    • அமைதியாய் இருப்பவர் தனது நாட்களுக்கான திட்டத்தை வகுத்து அதன்படி செயல்படுவார், அது சரியாக வரவில்லை என்றாலும் அதற்காக வருந்தாமல் இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தகுதிப்படுத்திக் கொள்வார். planning a day
    • அமைதியாய் இருக்கும் நபர் தனது கைப்பேசியை அளவாக பயன்படுத்துவார். செய்திகள் வாசிப்பது, செய்தி அனுப்புவது என முக்கியமான விடயங்களுக்கு மட்டுமே தனது கைப்பேசியை உபயோகம் செய்வார். 

    இதையும் படித்து பாருங்கள்:

    உங்கள் மனதை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டியவை?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....