Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஅறிவியல்அடுத்த மூன்று மாதங்களில் நாம் அடிக்கடி சிக்கப்போகும் வெப்ப அலை குறித்த தகவல்கள் இதோ!

    அடுத்த மூன்று மாதங்களில் நாம் அடிக்கடி சிக்கப்போகும் வெப்ப அலை குறித்த தகவல்கள் இதோ!

    வெப்ப அலை குறித்து கேள்விப்பட்டுள்ளீர்களா? கோடைக்காலங்களில் வெப்ப அலை வீசப்போவதாக செய்திகளில் கூறுவதை நாம் கேட்டிருப்போம். இவ்வளவு ஏன் ? அடுத்த மூன்று மாத காலம் நாம் பெரும்பாலும் வெப்ப அலையின் பிடியில்தான் சிக்கி தவிக்கப்போகிறோம். புரியும்படி சொன்னால் அனல் காற்று என்பார்களே அதற்கு அறிவியலின்படி அதிகாரப்பூர்வ பெயர் வெப்ப அலை என்பதாகும். ஆனால் வெப்ப அலை என்று எதை கூறுவர்? அதிக வெப்பமாக இருந்தால் இன்று வெப்ப அலை நிலவுகிறது என்று கூறி விட முடியுமா? வாருங்கள், வெப்ப அலை குறித்து சுருங்கவும் நிறைவாகவும் இங்கு காண்போம்!

    வெப்ப அலை அல்லது அனல் காற்று 

    வெப்ப அலை என்பது இயல்பு வெப்ப நிலையை விட கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வு தொடர்ச்சியாக 3 தினங்கள் அல்லது அதற்கு மேல் தொடர்வதை குறிக்கும். உலக வானிலை ஆய்வு அமைப்பானது தொடர்ச்சியாக 5 தினங்கள் அல்லது அதற்கு மேல் இயல்பு வெப்பநிலையை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் போது வெப்ப அலை ஏற்படும் என வரையறை செய்துள்ளது.

    வெப்ப அலை விகிதம்

    சமவெளிகளில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அதற்கு மேலாகவும், மலைப் பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு மேல் இருந்தால், கடலோரப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை தாண்டினாலும் அங்கு வெப்ப அலை நிகழ்வு ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

    அதிகபட்ச வெப்பநிலை வேறுபாடு 4.5 டிகிரி செல்சியஸ் முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் போது, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெப்ப அலையை அறிவிக்கிறது. உதாரணமாக, ஒரு பகுதியின் இயல்பான வெப்பநிலை 40 டிகிரியாகவும், உண்மையான பதிவு செய்யப்பட்ட வெப்பநிலை 45 டிகிரியாகவும் இருந்தால், அந்த இடம் வெப்ப அலையின் பிடியில் இருக்கிறது என்று பொருள்.

    அதேபோல, ஒரு வட்டாரத்தில் இயல்பிலிருந்து புறப்படும் அதிகபட்ச வெப்பநிலை 6.4 டிகிரிக்கு மேல் இருக்கும் போது கடுமையான வெப்ப அலை அறிவிக்கப்படுகிறது. இது தவிர, எந்த நாளிலும் உள்ளூரில் 45 டிகிரி மற்றும் 47 டிகிரிக்கு மேல் பதிவானால், இந்திய வானிலை ஆய்வு மையம் முறையே வெப்ப அலை மற்றும் கடுமையான வெப்ப அலை என அறிவிக்கிறது.

    முன்னறிவிப்பு கருவிகள் 

    இந்தியாவில், வெப்ப அலைகள் மார்ச் முதல் ஜூன் வரை, எப்போதாவது ஜூலையில் ஏற்படும். உச்ச வெப்ப அலை நிகழ்வுகள் மே மாதத்தில்தான் பெரும்பாலும் பதிவாகியுள்ளன.

    heat wave

    வெப்ப அலை பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் வெப்ப அலை தாக்கத்தால் உயிரிழப்புகள் நேராத வண்ணம் தடுக்கும் பொருட்டு உரிய காலத்திற்குள் முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை செய்ய வெப்ப அலை முன்னறிவிப்பு கருவிகள் வடிவமைக்கப்பட்டு நடப்பில் உள்ளன.

    தமிழகத்தின் சூழல் 

    இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெப்ப அலை அடிக்கடி ஏற்படும் என்றும் தமிழ்நாடு மற்றும் கேரளாவை பொறுத்தவரையில் எப்போதாவது வெப்ப அலை நிகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    heat wave

    தமிழகமானது இந்திய தீபகற்ப்பத்தின் பேரிடர் பாதிப்புகளுக்குள்ளாகும் பகுதிக்குள் அமைந்துள்ளது. இங்கு வானிலை மற்றும் புவியியல் சார்ந்த பேரிடர்களான சூறாவளி, வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி மற்றும் வறட்சி போன்றவை அடிக்கடி ஏற்பட்டு வருகின்றது. சமீபகாலமாக வெப்பநிலையில் ஏற்படும் உயர்வால் கோடை மற்றும் பருவமழைக்கு முந்தைய மாதங்களில் வெப்ப அலை பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....