Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்56 கோடிக்கும் மேல் சென்ற கொரோனா தொற்று பாதிப்பு! 

    56 கோடிக்கும் மேல் சென்ற கொரோனா தொற்று பாதிப்பு! 

    உலக அளவில் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56.13 கோடியாக அதிகரித்துள்ளது.  

    சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. தற்போது, இந்தத்தொற்று 228 நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து இன்னும் தொற்று பாதிப்பை அதிகரித்து வருகிறது. 

    இதனிடையே, உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 56 கோடியே 13 லட்சத்து 90 ஆயிரத்து 296 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 7 லட்சத்து 44 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 53 கோடியே 42 லட்சத்து 71 ஆயிரத்து 795 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 74 ஆயிரத்து 323 பேர் உயிரிழந்துள்ளனர். 

    இந்தியாவில், இதுவரை 5 லட்சத்து 25 ஆயிரத்து 474 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்தியாவில் உயரும் கொரோனா தொற்று- 43 பேர் பலி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....