Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகேரளாவின் முன்னாள் எம்.எல்.ஏ தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கம்

    கேரளாவின் முன்னாள் எம்.எல்.ஏ தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கம்

    உலக மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட 81 வயதான கேரளாவின் முன்னாள் எம்.எல்.ஏ, எம்.ஜெ. ஜேக்கோப் பதக்கங்களை வென்றுள்ளார். 

    எம்.ஜெ. ஜேக்கோப் 2006-ம் ஆண்டு கேரள மாநிலத்தின் பிறவம் சட்டமன்றத் தொகுதியில், சி.பி.எம் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாக பதவி வகித்தார். கடந்த 2006 ஆண்டு முதல் 2011 ஆண்டு வரை எம்.ஜெ. ஜேக்கோப்  எம்.எல்.ஏ-வாக பதவி வகித்தார். மேலும், எம்.ஜெ. ஜேக்கோப்  இருமுறை திருமாராடி பஞ்சாயத்து தலைவராக இருந்தார். அச்சமயத்தில் சிறந்த பஞ்சாயத்துக்கான விருதையும் அவர் வென்றுள்ளார். 

    சிறுவயது முதலே தடகளப் போட்டிகளில் மிகுந்த ஆர்வமுடையவராக இருப்பவர்தான், எம்.ஜெ. ஜேக்கோப். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் தடகளப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றிருக்கிறார். 

    அதன்பின்பு, மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் மாஸ்டர்ஸ் ஆசியா போட்டிகளில் கலந்துக்கொண்டு பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். மேலும், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் போட்டிகளிலும் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார், எம்.ஜெ. ஜேக்கோப். 

    இப்படியாக வலம் வரும் எம்.ஜெ. ஜேக்கோப், பின்லாந்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டார். இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 200 மீ மற்றும் 800 மீ தடை தாண்டுதல் போட்டிகளில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். 

    எம்.ஜெ. ஜேக்கோப் இதுகுறித்து பேசுகையில், “எனது மனைவி, மகன் மற்றும் மகள் எனக்கு முழு ஆதரவாக இருக்கிறார்கள். காயங்கள் ஏற்படும் என்ற காரணத்தினால், என்னை வீட்டில் மட்டுமே இருங்கள் என்று அவர்கள் சொல்வதில்லை. மேலும், விளையாட்டின் மீதான இந்த ஆர்வத்தை எனது உடலும் மனமும் அனுமதிக்கும் வரை கொண்டுச்செல்வேன் “ என்று தெரிவித்தார். 

    இங்கிலாந்தில் சூடுபிடிக்கும் பிரதமர் பதவிக்கான போட்டி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....