Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதக்காளி காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டாம்- வீணா ஜார்ஜ்

    தக்காளி காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டாம்- வீணா ஜார்ஜ்

    தக்காளி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

    கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கோட்டயத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

    கேரளாவில் ஒருசில மாவட்டங்களில் தக்காளி காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். ஒரு மாவட்டத்தில் கூட தக்காளி காய்ச்சல் நோய் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதோடு, உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரும் சிகிச்சை பெறுவதாக தகவல்கள் இல்லை. 

    தக்காளி காய்ச்சல் நோய் மூலம் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றாலும், மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட இது காரணமாகும் என்பது உண்மை. அதனால், பொதுமக்கள் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். மேலும், இந்நோய் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை மட்டுமே தாக்குவதால், அவர்களை பாதுகாப்புடன் கண்காணிக்க வேண்டும். 

    தக்காளி காய்ச்சல் நோய் தோன்றுவதாக அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். இதில், அலட்சியமாக இருக்க கூடாது. குழந்தைகளுக்கு இந்நோய் பரவாமல் இருக்க, நோய்வாய்ப்பட்டவர்களை தனிமைப்படுத்துதலும் மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில், உடனடியாக உரிய மருந்துகளை எடுத்துக்கொள்வதும், குழந்தைகளுக்கு போதுமான அளவுக்கு தண்ணீர் வழங்குவதும் முக்கியமாகும்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.  

    56 கோடிக்கும் மேல் சென்ற கொரோனா தொற்று பாதிப்பு! 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....