Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அமேசான் மழைக்காடுகள் அழிப்பு! காலநிலை மாற்றத்துக்கு வழிவகுக்குமா?

    அமேசான் மழைக்காடுகள் அழிப்பு! காலநிலை மாற்றத்துக்கு வழிவகுக்குமா?

    அமேசான் காடுகளில் மரங்கள் அழிந்து வருவது காலநிலை மாற்றத்துக்கு வழிவகுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். 

    அமேசான் மழைக்காடு பல லட்சம் கிலோ மீட்டர் பரப்பளவில் தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில், பெரு, ஈக்வடார் போன்ற 9 நாடுகளில் பறந்து விரிந்துள்ளது. அமேசான் காடுகளுடைய பரப்பு மொத்த ஐரோப்பிய யூனியனை விட பெரியதாகும். உலகில் எந்த இடத்தையும் விட அமேசான் காடுகளில் அதிக தாவரங்களும் விலங்குகளும் காணப்படுகிறது. 

    கடந்த சில ஆண்டுகளாகவே, மரங்கள் அழிப்பால் அமேசான் மழைக்காடுகள் அழிந்து வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டில் மட்டும் பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் நியூயார்க் நகரத்தைவிட 5 மடங்கு பெரிய பகுதி அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

    மேலும், 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 3 ஆயிரத்து 988 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு அமேசான் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக பிரேசிலில் உள்ள தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (INPE- National Institute for Space Research) தெரிவித்துள்ளது. 

    உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளான அமேசானில் மரங்கள் அழிந்து வருவது வளிமண்டலத்தை மேலும் வெப்பமாக்குவதோடு மட்டும் இன்றி, காலநிலை மாற்றத்துக்கு வழிவகுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

    56 கோடிக்கும் மேல் சென்ற கொரோனா தொற்று பாதிப்பு! 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....