Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பெண்களின் ஃபிட்னஸ்க்கு வேட்டு வைத்த தாலிபான்கள்..! ஆப்கானில் வந்தது புதிய தடை

    பெண்களின் ஃபிட்னஸ்க்கு வேட்டு வைத்த தாலிபான்கள்..! ஆப்கானில் வந்தது புதிய தடை

    ஆப்கானிஸ்தானில் பெண்கள் உடற்பயிற்சி மையங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஏறத்தாழ ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி ஓராண்டை கடந்துள்ளது.  இந்நிலையில், அவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் பெண்களுக்கும், அந்நாட்டுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். 

    ஆப்கானிஸ்தானில், தேவையில்லாமல் பெண்கள் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, பெண்கள் வெளியே வந்தால் உடலை முழுவதும் மூடியபடி வர வேண்டும் என்றனர். மேலும், பெண்கள் மேல்நிலை கல்வி கற்பதற்கு தடை விதித்தது பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கல்விக்காக வெளிநாடு செல்லவும் தடை விதித்தனர். பெண்கள் நலத்துறை அமைச்சகத்தையும் தலிபான்கள் மாற்றிவிட்டனர். 

    மேலும், பல பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கும் ஆப்கானிஸ்தானில் தடை விதிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில், ஒராண்டாக மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்களை திறக்க தலிபான்கள் அனுமதி கொடுத்தனர். அதைத்தொடர்ந்து, கல்வியில் சில திட்டங்களையும் வகுத்தனர். 

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உடற்பயிற்சி மையங்களுக்கு பெண்கள் செல்ல தலிபான் ஆட்சியாளர்கள் தடைவிதித்துள்ளனர். மேலும், இது குறித்து அந்நாட்டின் பிரமுகர் முகமது அகீஃப் முஹாஜிர் தெரிவித்துள்ளதாவது; 

    ஆண்களையும், பெண்களையும் வெவ்வேறு நாள்களில் அனுமதிப்பது, அவர்களிடையே மறைவுத் தடுப்பு மாதிரி ஏற்படுத்துவது உள்ளிட்ட விதிமுறைகளை உடற்பயிற்சி மையங்கள் மீறி விட்டன. அதனால், வேறு வழியின்றி இந்த தடை விதிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: போலி கணக்குகளுக்கும் ‘ப்ளூ டிக்’ ! எலான் மஸ்க்கின் புதிய திட்டத்தால் ட்விட்டரில் குளறுபடி?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....