Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபோலி கணக்குகளுக்கும் 'ப்ளூ டிக்' ! எலான் மஸ்க்கின் புதிய திட்டத்தால் ட்விட்டரில் குளறுபடி?

    போலி கணக்குகளுக்கும் ‘ப்ளூ டிக்’ ! எலான் மஸ்க்கின் புதிய திட்டத்தால் ட்விட்டரில் குளறுபடி?

    ட்விட்டரில் ‘ப்ளு டிக்’ வழங்கும் விவகாரத்தில் எலான் மஸ்க் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. 

    எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு சம்பவங்கள் ட்விட்டரில் நிகழ்ந்து வருகின்றன. அவரின் செயல்கள் ட்விட்டர் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வண்ணமே உள்ளது. 

    சமீபத்தில் கூட ட்விட்டரில் ப்ளு டிக் வசதிக்கு மாதந்தோறும் ரூ.710 வசூலிக்கப்படும் என கூறி எலான் மஸ்க் அதிர்ச்சியளித்தார். இதைத்தொடர்ந்து, இந்த கட்டண நடவடிக்கை இந்தியாவில் கடந்த 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

    இந்நிலையில், இந்த ப்ளூ டிக் குறித்து தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, எலான் மஸ்க் வகுத்துள்ள புதிய விதிமுறையால் பொய்ச் செய்திகளை பரப்பும் பல போலிக் கணக்குகளும் ப்ளூ டிக் பெற்று வருகின்றன. இந்த முறையினால் போலிச் செய்திகள் அதிகம் பகிரப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

    அதிகாரப்பூர்வ பக்கங்களை உறுதிப்படுத்துவதிலும் போலி கணக்குகளை நீக்குவதிலும் ட்விட்டர் நிறுவனம் கவனம் செலுத்தும் என்று பார்த்தால், கட்டணம் வசூலிப்பதிலேயே கவனாமக உள்ளனர் என்றும் குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர். 

    முன்னதாக,  ‘பொய்களைப் பரப்புவதற்காகவே எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியுள்ளார்’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....