Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவில் இந்தியர்களை தரக்குறைவாக பேசிய பெண் கைது

    அமெரிக்காவில் இந்தியர்களை தரக்குறைவாக பேசிய பெண் கைது

    அமெரிக்காவில் இந்தியர்களை தரக்குறைவாக பேசியதற்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வாகனத்தை நிறுத்துவதில், வாக்குவாதம் ஏற்பட்ட போது அமெரிக்காவை சேர்ந்த எஸ்மெரல்டா என்கிற பெண் ஒருவர், அமெரிக்க வாழ் இந்திய பெண்ணிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டுள்ளார்.

    மேலும் அந்த பெண் தாக்க முயற்சி செய்ததோடு இனவாதத்தைத் தூண்டும் வகையில், ‘இந்தியாவில் வாழ்க்கை சரியில்லாத காரணத்தினால் தானே, நீங்கள் எல்லோரும் அமெரிக்காவிற்கு வருகிறீர்கள்? இங்கு வந்து இலவசமாகப் பெற துடிக்கிறீர்கள். நான் இந்தியர்களை சுத்தமாக வெறுக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். 

    மேலும், அவரிடம் துப்பாக்கி இருந்ததை கவனித்த மற்ற சில பெண்கள், நடந்த இச்சம்பவத்தை காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

    உடனடியாக விரைந்து வந்த காவலர்கள், தீவிரவாத அச்சுறுத்தல் பெயரில் அமெரிக்கப் பெண்ணை கைது செய்தனர்.

    சாக்லேட், ஷாம்பூ உள்ளிட்ட 300 பொருள்களுக்கு இலங்கை அரசு தடை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....