Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைசாக்லேட், ஷாம்பூ உள்ளிட்ட 300 பொருள்களுக்கு இலங்கை அரசு தடை!

    சாக்லேட், ஷாம்பூ உள்ளிட்ட 300 பொருள்களுக்கு இலங்கை அரசு தடை!

    பொருளாதாரத்தை சீரமைக்கும் நடவடிக்கையாக 300 நுகர்வோர் பொருள்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

    அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் இலங்கை அரசு தவித்து வருகிறது. மேலும் கடுமையான பொருளாதர நெருக்கடியால், மக்கள் பலர் ஒருவேளை உணவிற்கு திண்டாடி வருகின்றனர். 

    அதேபோல், அத்திவாசியப் பொருள்களின் விலைகளும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது. 

    இந்நிலையில், பொருளாதாரத்தை சீரமைக்கும் நடவடிக்கையாக 300 நுகர்வோர் பொருள்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இதற்கான சிறப்பு அறிவிப்பாணையை இலங்கை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

    அதன்படி, சாக்லேட், ஷாம்பூ, வாசனை திரவியங்கள், ஒப்பனை பொருள்கள் உள்பட நுகர்வோர் பயன்படுத்தும் 300 பொருள்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு முன்பு கப்பலில் ஏற்றப்பட்டு, செப்டம்பர் 14-ம் தேதிக்குள் இலங்கை வந்தடையும் பொருள்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....