Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்சிப்ஸ்க்காக காதலர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்; நீதிமன்றம் வரை சென்ற பிரச்சினை

    சிப்ஸ்க்காக காதலர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்; நீதிமன்றம் வரை சென்ற பிரச்சினை

    சிப்ஸ்க்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் காதலனை காரில் இருந்து இறக்கிவிட முயன்ற பெண், நீதிமன்ற தண்டனை பெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ஆஸ்திரேலிய நாட்டில் அடிலெய்ட் என்ற பகுதியில் சார்லோட் ஹாரிசன் என்ற பெண்ணுக்கும் மேத்யூ ஃபின் என்ற நபருக்கும் இடையே சிக்கன் சிப்ஸ்க்காக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காரை இயக்கி கொண்டிருந்த சார்லோட் தனது காரை வேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். 

    இதுகுறித்து சார்லோட் கூறுகையில், இந்தச் சம்பவம் விபத்து தான் எனவும், தான் காவல் நிலையத்துக்கு செல்ல இருந்ததாகவும், அப்போது தவறுதலாக பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் விபத்து ஏற்பட்டதாகவும்  தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக மேத்யூ கூறுகையில், சார்லோட்டின் சிக்கன் சிப்ஸ் பேக்கில் இருந்து ஒரு சிப்ஸ் கேட்டதாகவும், அப்போது சார்லோட் சாப்பிட்டுவிட்டதாக எண்ணியதாகவும், அப்போது தான் அதை கேட்டிருக்கவே கூடாது எனவும் கூறியுள்ளார். 

    சிப்ஸ் கேட்டு வாக்குவாதம் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில் மேத்யூ காரை விட்டு இறங்கியதாக சொல்லப்படுகிறது. அப்போது அவரை பின்தொடர்ந்த போதே சார்லோட் கார் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால், இத்தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சார்லோட்டை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். 

    இதையடுத்து சார்லோட் தனது ஜாமீன் மனுவில், தனக்கு மேத்யூவை காயப்படுத்த வேண்டிய எண்ணம் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, நீதிபதி சார்லோட்டை வீட்டுக்காவலில் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளார். 

    சிப்ஸ்க்காக காதலர்கள் இடையே விவாதம் ஏற்பட்டு சாலையோர கம்பத்தில் மோதி விபத்து ஏற்படுத்திய காதலியின் செயல் ஆஸ்திரேலிய ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    பிச்சைக்காரன்- 2 எப்போது?…வெளிவந்த தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....