Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'ரன் பேபி ரன்' ஓடிடியில் எப்போது ரன்னாகும்? - வெளிவந்த தகவல்..

    ‘ரன் பேபி ரன்’ ஓடிடியில் எப்போது ரன்னாகும்? – வெளிவந்த தகவல்..

    ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ரன் பேபி ரன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    எல்.கே.ஜி, மூக்கூத்தி அம்மன், வீட்ல விஷேஷம் போன்ற படங்களின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆர்.ஜே.பாலாஜி. இவரின் நடிப்பில் இம்மாதம் 3 ஆம் தேதி ரன் பேபி ரன் என்ற படம் வெளியாகியது. இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரிதீயாக படக்குழு லாபத்தை அடைந்தது. 

    திரையரங்குகளில் தற்போதும் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் வரும் மார்ச் 10-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ரன் பேபி ரன் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். த்ரில்லர் படமாக தயாரிக்கப்பட்ட இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருந்தார். ஆர்.ஜே.பாலாஜியின் முந்தையப் படங்களில் இருந்து ரன் பேபி ரன் முற்றிலுமாக மாறுபட்ட படம் என்று ரசிகர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    பிச்சைக்காரன்- 2 எப்போது?…வெளிவந்த தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....