Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பிச்சைக்காரன்- 2 எப்போது?...வெளிவந்த தகவல்..

    பிச்சைக்காரன்- 2 எப்போது?…வெளிவந்த தகவல்..

    நடிகர் விஜய் ஆண்டனி நடித்தும், இயக்கியும் உள்ள பிச்சைக்காரன்-2 வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது மழை பிடிக்காத மனிதன், அக்னிச் சிறகுகள், பிச்சைக்காரன்-2 போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் பிச்சைக்காரன்-2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்றது. 

    இப்படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், இயக்கவும் செய்கிறார் விஜய் ஆண்டனி. மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்ற படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டபோது, படகு விபத்து ஏற்பட்டது. 

    இந்த விபத்தில் விஜய் ஆண்டனிக்குக் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிகழ்வு சினிமா வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

    இதைத்தொடர்ந்து, விஜய் ஆண்டனி உடல் நிலைகள் தேறி பிச்சைக்காரன் – 2 படத்தின் பணிகளில் ஈடுபட்டார். சமீபத்தில், அப்படத்திலிருந்து வெளிவந்த படக்காட்சிகள் ரசிகர்கள் இடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பிச்சைக்காரன்-2 வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். 

    ‘வரலாறும் துரோகம்தான்’ – அகிலன் படத்திலிருந்து வெளியான பாடல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....