Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஈரானில் பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு விஷம்... வெளிவந்த பகீர் தகவல்

    ஈரானில் பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு விஷம்… வெளிவந்த பகீர் தகவல்

    ஈரானில், பெண்கள் பள்ளி செல்வதைத் தடுப்பதற்காக சிலர், பள்ளிச் சிறுமிகளுக்கு விஷம் கொடுத்ததாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ’கடவுளுக்கு எதிரான போர்’ என்ற குற்றச்சாட்டில் ஈரான் அரசு கைது செய்தும், அவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 

    இந்நிலையில், ஈரானில், பெண்கள் பள்ளி செல்வதைத் தடுப்பதற்காக சிலர், பள்ளிச் சிறுமிகளுக்கு விஷம் கொடுத்ததாக அந்நாட்டு துணை அமைச்சர் வெளியிட்ட தகவல் பெரும் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

    ஈரானின் தெற்கு டெஹ்ரானில் அமைந்துள்ள கோம் பகுதியில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பள்ளிச் சிறுமிகள் பலருக்கும் அவ்வப்போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. 

    ஈரானின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் யூநெஸ் பனாஹி, பள்ளிச் சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார். குறிப்பாக, கோம் பள்ளியில் பயின்று வந்த மாணவிகள் ஏராளமானோருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதும், அனைத்துப் பள்ளிகளும் குறிப்பாக பெண்கள் மட்டும் பயிலும் பள்ளிகள் அனைத்தையும் மூட வேண்டும் என்ற நோக்கத்தோடு சிலர் இவ்வாறான இழிவான செயலில் ஈடுபட்டிருப்பதாக அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

    ஐசிசி அறிவித்த அணி; இடம்பெற்ற ஒரே ஒரு இந்திய வீராங்கனை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....