Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஐசிசி அறிவித்த அணி; இடம்பெற்ற ஒரே ஒரு இந்திய வீராங்கனை

    ஐசிசி அறிவித்த அணி; இடம்பெற்ற ஒரே ஒரு இந்திய வீராங்கனை

    இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளைக் கொண்டு ஐசிசி ஓர் அணியை அறிவித்துள்ளது.

    தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 8-ஆவது மகளிர் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணி இறுதி ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. 

    இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாக இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்றுள்ளது. மேலும், கடந்த 2018, 2020-ம் ஆண்டு போட்டிகளில் வாகை சூடிய ஆஸ்திரேலியா, தொடர்ந்து 3-வது முறையாக தற்போதும் கோப்பையை வென்றிருக்கிறது. 

    மேலும், ஆஸ்திரேலிய அணி ஹாட்ரிக் கோப்பை வெல்வது இன்று 2- வது முறையாகும். இதற்கு முன் 2010, 2012, 2014 ஆகிய ஆண்டுகளிலும் அந்த அணி தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்றது. 

    இந்நிலையில், இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளைக் கொண்டு ஐசிசி ஓர் அணியை அறிவித்துள்ளது. இந்த அணியில் இந்திய அணியின் சார்பில் ரிச்சா கோஷ் என்ற வீராங்கனை மட்டுமே இடம்பெற்றுள்ளார். 

    அந்த அணியாவது; 

    1.பிரிட்ஸ் (தெ.ஆ)

    1. அலிஸா ஹீலி (ஆஸ்திரேலியா, விக்கெட் கீப்பர்)
    2. லாரா வோல்வார்ட் (தெ.ஆ)

    4.நாட் சிவர் பிரண்ட் (இங்கிலாந்து, கேப்டன்)

    1. ஆஷ் கார்ட்னர் (ஆஸ்திரேலியா)
    2. ரிச்சா கோஷ் (இந்தியா)
    3. சோஃபி எக்லஸ்டோன் (இங்கிலாந்து)

    8.கரிஷ்மா (மே.இ. தீவுகள்)

    1. ஷப்னிம் (தெ.ஆ.)
    2. டார்சி பிரௌன் (ஆஸ்திரேலியா)
    3. மேகன் ஷுட் (ஆஸ்திரேலியா)
    4. பிரண்டர்காஸ்ட் (அயர்லாந்து)

    துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....