Thursday, March 21, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இயக்குநர் மோகன்.ஜி அடுத்தப் படம் குறித்த அப்டேட்...

    இயக்குநர் மோகன்.ஜி அடுத்தப் படம் குறித்த அப்டேட்…

    பகாசூரன் படத்தையடுத்து இயக்குநர் மோகன்.ஜி இயக்கவுள்ள அடுத்தப்படம் குறித்த அப்டேட்டை அவர் கொடுத்துள்ளார். 

    ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய மோகன்.ஜி தற்போது இயக்குநர் செல்வராகவனை வைத்து இயக்கிய பகாசூரன் படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. 

    இத்திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும், சில நன்மதிப்புகளையும் இப்படம் உருவாக்கி வருகிறது. இதைத்தொடர்ந்து, இயக்குநர் மோகன்.ஜி அடுத்தப் படம் குறித்த கேள்விகளை பலரும் முன்வைத்து வந்தனர். 

    இந்நிலையில், மோகன்.ஜி தனது அடுத்தப் படம் குறித்த அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, ‘சில மீடியாக்களுக்கு.. இவரு யாருன்னு தெரியுதா.. காசி கங்கா ஆர்த்தியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்ட் ரிஷி சார்.. நீங்களா எதாவது கிளப்பி விடாதீங்க.. அப்பறம் முக்கியமான செய்தி.. என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் சார் தான் அறிவிப்பு விரைவில்…’ என்று தெரிவித்துள்ளார். 

    துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....