Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்திமுக-உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் சொன்ன பதில்?

    திமுக-உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் சொன்ன பதில்?

    முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் தனுக்குமான நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

    தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு 70 ஆண்டு கால வாழ்வை விளக்கும் புகைப்பட கண்காட்சியை இன்று ராஜா அண்ணாமலை மன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சி ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது. 

    இந்தக் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய கமல்ஹாசன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் தனுக்குமான நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. முதல்வருக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள். நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து படபிடிப்பை ஒத்திவைத்துவிட்டு வந்திருப்பதாக தெரிவித்தார். 

    தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், சவால்களை சந்தித்து படிப்படியாக உயர்ந்து முதல்வர் ஆனவர் தான் மு.க.ஸ்டாலின் எனவும், தனது திறமையால் வளர்ந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் எனவும் குறிப்பிட்டு பேசினார். 

    மேலும் தமிழர்களின் சரித்திரத்தை மாற்றி எழுத பலர் துடித்துக்கொண்டிருப்பதாகவும், திமுக கூட்டணி குறித்து இப்போது சொல்ல எதுவும் இல்லை எனவும், சீன் பை சீனாகத் தான் செல்ல வேண்டும்; இப்போதே கிளைமேக்ஸுக்கு செல்ல கூடாது எனவும் தெரிவித்தார்.   

    ‘ஆஸ்திரேலிய அணிக்கு தெளிவில்லை’ – ஹர்பஜன் சிங் விமர்சனம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....