Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமும்பை ஐஐடி மாணவர் தற்கொலை; விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு

    மும்பை ஐஐடி மாணவர் தற்கொலை; விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு

    மும்பை ஐஐடி மாணவர் தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூத்த காவல்துறை அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை மராட்டிய அரசு நியமித்துள்ளது. 

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தர்ஷன் சோலங்கி என்ற மாணவர் மராட்டிய மாநிலத்தில் உள்ள ஐஐடியில் பி.டெக் படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி அன்று ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதி கட்டடத்தின் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

    மாணவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக ஐஐடியில் பாகுபாடு காட்டப்பட்டதாகவும், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதனிடையே, குஜராத் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜிகேஷ் மேவானி, மாணவர் மரணம் குறித்து எஸ்ஐடி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

    இதைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி மாணவரின் இறப்பு குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தனிக்குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் முக்கிய நபர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 

    திமுக-உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் சொன்ன பதில்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....