Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர்- உச்சநீதிமன்றம்

    மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர்- உச்சநீதிமன்றம்

    அமைச்சர்கள் குழு ஒரு கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தால், அதனை மாநில ஆளுநர் ஏற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

    பஞ்சாப் மாநில சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட அம்மாநில ஆளுநர் பனிவாரிலால் புரோஹித் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. 

    இந்த வழக்கில் உச்சநீதிமன்றம், மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர் என ஏற்கனவே பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பாக வழங்கி இருப்பதாகவும், அமைச்சர்கள் குழு ஒரு கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தால் அதனை மாநில ஆளுநர் ஏற்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது. 

    பஞ்சாப் மாநில பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதை மாநில ஆளுநர் தாமதப்படுத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாது. மாநில முதல்வர் மற்றும் ஆளுநர் இருவரும் அரசியல் சாசன கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும். அரசியல் ரீதியாக கொள்கைகளில் வித்தியாசப்படுவது வேறு, அதே சமயம் வேலை என்று வரும்போது எந்த வேறுபாடும் காட்டாமல், வேலைசெய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தனது கருத்துகளை தெரிவித்துள்ளது.

    ஒரே நபர் பல பெயர்களில் விந்தணு தானம்… கண்டுபிடித்த தம்பதியினர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....