Monday, March 18, 2024
மேலும்
    Homeஆன்மிகம்கிறித்துவர்கள் புனித வெள்ளி கொண்டாடுவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?

    கிறித்துவர்கள் புனித வெள்ளி கொண்டாடுவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?

    புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்று கிறித்துவர்களால் கொண்டாடப்படும் குட் ஃப்ரைடே இயேசு கிறித்து உயிர் நீத்த நாளாகும். மக்களின் பாவங்களுக்காகவும் உலக நன்மைக்காகவும் இயேசு கிறித்து உயிர் துறந்தார் என்று கிறித்துவர்கள் இந்நாளில் நினைவுக் கூறுவார்கள். மேலும் இதற்கு சான்றாக கிறித்துவர்களின் புனித நூல்களான புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாடு திருவிவிலிய புத்தகங்கள் இருக்கின்றன. வாருங்கள் தெரிந்துக் கொள்வோம் இயேசு கிறித்து ஏன், எப்படி இறந்தார் என்று. 

    இயேசு கிறித்து கைது: 

    இயேசு கிறித்து எருசலேம் காவலர்களால் கைது செய்யப்பட்டார். இவரை காட்டிக் கொடுத்தது இவருடைய 12 சீடர்களுள் ஒருவரான யூதாஸ் என்பவர். யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுகளுக்காக இயேசு கிறித்துவிற்கு முத்தம் கொடுத்து காட்டிக் கொடுத்தார். 

    இயேசுவின் விசாரணை: 

    பின்பு அன்னாஸ் என்ற தலைமைக் குருவிடம் கொண்டுச் சென்று நிறுத்தினார்கள். அப்போது இயேசுவின் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இரண்டு குற்றச்சாட்டுகள் இதில் முக்கியமானவை. ஒன்று, இயேசு எருசலேமில் உள்ள கோவிலை இடித்து மூன்று நாட்களில் கட்டி எழுப்புவதாகவும், இரண்டு, இவர் தன்னை கடவுளுக்கு நிகராக்கிக் கொண்டார் எனவும் இரண்டு குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 

    அனைத்தையும் விசாரித்த தலைமைக் குரு, ‘நீ தான் கடவுளின் குமாரன் மெசியாவா’ என்றும் ‘வாழும் கடவுளின் மீது ஆணையிட்டு சொல்லுமாறு கேட்கிறேன்’ என்றும் கூறினார். அதற்கு இயேசு கிறித்து, ‘நீங்களே சொல்லுகிறீர்’ என்று பதிலுரைத்தார். தலைமைக்குரு இயேசு கடவுளை பழித்தாக கூறினார். கூடியிருந்த மக்கள் இயேசு சாக வேண்டும் என்று கூச்சலிட்டனர். 

    மறுதலித்த பேதுரு: 

    12 சீடர்களில் ஒருவராகிய பேதுரு, இயேசுவை தெரியுமா என்று கேட்டதற்கு தெரியாது என்று மூன்று முறை மறுதலித்தார். பின்பு அவர் செய்த செயலை நினைத்து வருத்தினார். மேலும் உடன் இருந்த சீடர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டார்கள். 

    பிலாத்துவின் உண்மை: 

    உரோமின் ஆளுநராக பிலாத்துவிடம் இயேசு கிறித்துவை கொண்டு சென்றார்கள். விசாரித்த பிலாத்து, அனைவரின் முன்பும் இயேசு கிறித்துவின் மீது எந்த குற்றமும் இல்லை என்று தெரிவித்தார். பின்பு இயேசு கலிலேயாவைச் சேர்ந்தவர் என்பதால் அவரை, ஏரோது ராஜாவிடம் கொண்டு செல்ல சொன்னார்.  எருசலேமிய விழாவிற்கு வந்த ஏரோது ராஜா பல கேள்விகளைக் கேட்டார். ஆனால், இயேசு பதில் ஒன்றும் சொல்லாமல் அமைதிக் காத்தார். அதனால், பிலாத்து சாட்டையால் அடிக்க சொல்லி விடுதலை செய்யுமாறு கூறினார். 

    மக்களின் முடிவு:

    ஆனால், மக்கள் இவரை விடுவிக்க கூடாது என்றும் பரபா என்ற குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறினர். பின்பு பிலாத்து இயேசுவை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு, ‘சிலுவையில் அரையுங்கள்’ என்று மக்கள் கத்தி கூச்சலிட்டனர். அதனால் பிலாத்து, பதவி போய்விடும் என்ற பயத்தில், ‘இவரின் இரத்த பழியில் தமக்கு பங்கில்லை’ என்று கையைக் கழுவினார்.

    இயேசு கிறித்துவின் துயரம்: 

    பின், இயேசு கொல்கதா மலையின் மேல் ஏறினார். அவருக்கான சிலுவையை அவரே சுமந்தார். மக்கள் சிலர் அவருக்காக அழுதனர், பலர் அவரை ஏளனம் செய்தனர். முட்களால் செய்த கிரீடத்தை அவருக்கு தலையில் சூட்டினர். அனைத்து ஆடைகளையும் அவிழித்துவிட்டு சிறிய சிகப்பு நிற துணியினை அவரின் இடிப்பில் கட்டி, சாட்டையால் அடித்து காயப்படுத்தி மலைக்கு அழைத்து சென்றனர். இவருக்காக அழுத்த பெண்களை நோக்கி இயேசு, ‘எனக்காக அழ வேண்டாம் எருசேலம் பெண்களே, உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்’ என்று கூறினார். 

    இயேசு கிறித்துவுடன் இரண்டு குற்றவாளிகள் சிலுவையில் அறையப்பட்டனர். இரண்டு கைகளிலும் ஆணிகள் அடிக்கப்பட்டது. கால்கள் இரண்டையும் சேர்த்து ஆணி அடிக்கப்பட்டது. இயேசுவின் இரத்தம் ஆறாய் வழிந்தது. 

    குற்றவாளிகளின் கருத்து: 

    இயேசுவில் இடது மற்றும் வலது புறத்தில் இரண்டு குற்றவாளிகளுக்கு சிலுவை தண்டனை வழங்கப்பட்டது. அபோது ஒரு குற்றவாளி, ‘நீ மெசியாதானே உன்னையும் எங்களையும் காப்பாற்று’ என்று ஏளனம் செய்யும் விதமாக கூறினான். மற்றொருவன், ‘கடவுளுக்கு நீ பயப்படவில்லையா, நாம் தவறு செய்ததால் தண்டனை வழங்கப்படுகிறது. இவர் குற்றம் ஒன்றும் செய்யவில்லையே’ என்று பதில் கூறினான். பின் இவர் கிறித்துவை நோக்கி, ‘நீங்கள் திரும்பும் போது என்னை நினைவில் கொள்ளுங்கள்’ என்று கூறினான். அதற்கு இயேசு, ‘நீ இன்று என்னோடு பரலோகத்தில் இருப்பாய்’ என்று குறிப்பிட்டார். இவை அனைத்தும் லூக்கா எழுதிய சுவிஷேசத்தில் வசனங்களாக உள்ளன. 

    அவர் இறுதியில் கூறியவை:

    அவரின் சீடர்களுள் அன்பு மிக்க யோவான் அங்கு இருந்தார். இயேசு கிறித்துவின் தாய் மரியாள் அங்கு நின்று அழுது கொண்டிருந்தார். 

    அவரின் தாயை நோக்கி இயேசு, ‘இதோ உன் மகன்’ என்று யோவானை பார்த்து கூறினார். மேலும் ‘இதோ உன் தாய்’ என்று மரியாளைப் பார்த்து கூறினார். 

    இயேசுவின் உயிர் பிரிந்தது:

    தாகமாயிருக்கிறது என்றதும் புளித்த திராட்சை இரசத்தை கடற்பஞ்சில் தோய்த்து இயேசுவின் வாயில் வைத்தார்கள் அப்போது இயேசு, ‘எல்லாம் நிறைவேறிற்று’ ‘கர்த்தாவே என் ஆவியை உம்மிடம் ஒப்படைக்கிறேன்’ என்று கூறி தனது உயிரைத் துறந்தார். மக்கள் அவருக்காக மாரடித்து அழுது புலம்பினர். 

    மக்களின் பாவங்களுக்காக இயேசு, தனது உயிரைத் துறந்தார் என்பதை நினைவு கூறுவதற்காக இந்த புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. மேலும் எவ்வாறு இயேசு சிலுவை துன்பங்களை அனுபவித்தார் என்பதை கிறித்துவ மக்கள் இந்நாளில் நினைவு கூறுவது வழக்கம். இதற்கு அடுத்து மூன்றாம் நாள் இயேசு உயிர்த்தெழுதல் நிகழ்வு நடைபெறும். 

    இன்று சாம்பல் புதன் தினம்! சாம்பல் புதன் என்று அழைக்க காரணம் இது தான்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....