Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஆன்மிகம்இன்று சாம்பல் புதன் தினம்! சாம்பல் புதன் என்று அழைக்க காரணம் இது தான்!

    இன்று சாம்பல் புதன் தினம்! சாம்பல் புதன் என்று அழைக்க காரணம் இது தான்!

    சாம்பல் புதன், திருநீற்றுப் புதன், விபூதி புதன் ( ash wednesday ) என பலப் பெயர்களில் அழைக்கப்படுகின்ற கிருத்துவர்களின் தவக்காலமான நாற்பது நாட்களில் இன்றைய நாள் முதல் நாள் ஆகும். முதல் நாளாகிய இன்று மன மாற்றத்திற்கும், பாவங்களிலிருந்து விடுபடவும் சாம்பல் நெற்றியில் பூசப்படுகிறது. 

    குருத்தோலைகளை எரித்து சாம்பலாக்கி, நோன்பின் முதல் நாளின் தொடக்கத்தில் நெற்றியில் பூசிக் கொள்வர். இந்தச் சாம்பல், குருத்தோலை ஞாயிறு அன்று பயன்படுத்தப்பட்டு ஆலயங்களில் சேமித்துவைக்கப்படும்.  

    பதினாறு வயதுக்குட்பட்டவர்கள் உண்ணா நோன்பிருந்தும் 17 முதல் 60 வயத்துக்குட்பட்டவர்கள் வாரத்தில் ஏதேனும் ஒருநாள் நோன்பிருந்தும் தவத்தை மேற்கொள்வர். ஞாயிறு அன்று மட்டும் நோன்பிருக்க மாட்டார்கள், காரணம் அந்நாள் இயேசு கிறித்து உயிர்த் தெழுந்த நாள். ஆகையால் அந்நாளில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். thiruneetru puthan

    திருத்தொண்டர், ”மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே” எனக் கூறியவுடன் அனைவரும் நெற்றியில் சாம்பலைப் பூசிக் கொள்வார்கள். மேலும் இந்த பூசுதல் பொதுவாக சிலுவைக் குறியீட்டில் இருக்கும். இந்த வசனம் புதிய ஏற்பாட்டில் உள்ளது.

    நாற்பது நாட்கள் என்பது வேதப் புத்தகத்தில் இயேசு கிறித்து நாற்பது நாட்கள் விரதம் இருந்தார் என்பதை நினைவு கூறும் விதமாகவும், மனிதர்கள் தங்களின் பாவங்களை நினைத்து அதில் இருந்து மீண்டு திரும்பவும் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாட்களில் வேதப் புத்தகங்களைப் படித்தும் உருக்கமாய் ஜெபித்தும் தவத்தை மேற்கொள்வர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....