Friday, March 31, 2023
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்'கிரிப்டோகரன்சி' மூலம் மோசடி செய்யும் கோடீஸ்வர கிரிமினல்கள்!!!

    ‘கிரிப்டோகரன்சி’ மூலம் மோசடி செய்யும் கோடீஸ்வர கிரிமினல்கள்!!!

    கடந்த 2021-ஆம் ஆண்டில் கிரிமினல்கள் வசம் இருந்த சட்டவிரோதமாக வைத்திருந்த கிரிப்டோகரன்சியின் மதிப்பு மட்டும் 82 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பிளாக்செயின் என்னும் தரவு நிறுவனமான செயினாலிசிஸ் இந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

    கிரிப்டோகரன்சி

    கடந்த ஆண்டுகளில் மட்டும் கிரிப்டோகரன்சி பல குற்றவாளிகளை கோடீஸ்வரராக்கி உள்ளது. இதற்கு, கிரிப்டோகரன்சி எனும் மெய்நிகர் நாணயங்கள் உதவியாக இருந்துள்ளன. 2020-ஆம் ஆண்டு இறுதியில், குற்றச்செயல் புரிபவர்கள் வசம் 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிரிப்டோகரன்சி நிதி இருந்தது. இது, 2021-ஆம் ஆண்டில், 82 ஆயிரத்து 500 கோடி ரூபாய்யாக உயர்ந்துள்ளது.

    இதற்கான ஆதாரங்கள்ளுடன் சட்டவிரோத நிதி உள்ளனர். 2021-ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி கிரிமினல்களால் திருடப்பட்ட நிதியின் மதிப்பு மட்டும் 73 ஆயிரத்து, 500 கோடி ரூபாய். மொத்த தொகையில் 93% கிரிப்டோகரன்சி அனைத்தும் குற்றவாளிகள் வசம் உள்ளது.

    bitcoin

    இதற்கு, அடுத்தபடியாக குற்றவாளிகள் சட்டவிரோதமான பொருட்களை விற்பனை செய்வதன்மூலம் 3,350 கோடி ரூபாயை கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளனர். இதேபோல், மோசடி கடைகள் வாயிலாக கிட்டத்தட்ட 1,450 கோடி ரூபாயை திரட்டி உள்ளனர்.

    2021-ஆம் ஆண்டில் குற்றவாளிகளின் இருப்பு தொகை முழுதும் ஏற்ற – இறக்கத்துடன் இருந்துள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதத்தில் குறைந்தபட்சமாக 49 ஆயிரத்து 500 கோடி ரூபாயும், அக்டோபரில் 1.11 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    ipl

    கோலாகலமாகத் தொடங்கும் ஐபிஎல்; இன்று முதல் போட்டி!

    ஐபிஎல் தொடரின் 16-ஆவது சீசனின் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் தொடங்குகிறது.  இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் சிறப்பான...