Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகலவரமாய் மாறிய கால்பந்து போட்டி : அட்லெடிகோ மாட்ரிட் வீரர்கள் மீது நடவடிக்கை பாயுமா ?

    கலவரமாய் மாறிய கால்பந்து போட்டி : அட்லெடிகோ மாட்ரிட் வீரர்கள் மீது நடவடிக்கை பாயுமா ?

    களத்தில் மோதிக்கொண்ட அட்லெடிகோ மாட்ரிட் மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணி வீரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அறிக்கைக்காக காத்திருப்பதாக கூறியுள்ளது யுஇஎப்ஏ கால்பந்து சம்மேளனம். 

    யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் காலிறுதியின் இரண்டாவது ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட் மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணிகள் வாண்டா மெட்ரோபோலிடானோ மைதானத்தில் மோதிக்கொண்டன. 

    இந்த இரு அணிகளுக்கு இடையேயான காலிறுதியின் முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் அணி ஒரு கோல் அடித்து வெற்றி மற்றும் கோல் அடிப்படையில் முன்னிலை பெற்று இருந்தது. ஆகையால், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது அட்லெடிகோ மாட்ரிட் அணி.

    கால்பந்து ஆட்டங்களைப் பொறுத்தவரை களத்தில் ஆக்ரோஷத்துக்கு பஞ்சமே இருக்காது. அதுவும், காலிறுதி போன்ற முக்கியமான ஆட்டங்களில் சொல்லவே தேவை இல்லை. 

    அதுவும் எதிரணியின் முக்கிய ஆட்டக்காரர்கள் தாறுமாறாக தாக்கப்படுவார்கள். 2014ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த நெய்மாரின் முதுகு உடைக்கப்பட்ட காட்சிகளே இதற்கு சாட்சி. 

    அந்த வகை ஆட்டத்தை தான் அட்லெடிகோ மாட்ரிட் அணி கையிலெடுத்து விளையாடியது. ஏதோ அவர்களின் அணியில் ஒப்லாக் போன்ற சிறப்பான கோல்கீப்பர் இருப்பதனால், அட்லெடிகோ மாட்ரிட்டின் கோல்கம்பம் நோக்கிய தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. ஆனாலும், தாக்குதல்கள் நின்ற பாடில்லை. இதனால், அட்லெடிகோ மாட்ரிட் அணியின் பின்கள ஆட்டக்கார்களுக்கு நெருக்கடி அதிகமானது.     

    அட்லெடிகோ மாட்ரிட் அணியின் பெலிப்பே, முந்தைய ஆட்டத்தின் நாயகன் கெவின் டி புருய்ன் மீது நடத்திய தாக்குதலுக்காக முதல் மஞ்சள் அட்டையைப் பெற்றார்.

    ஆட்டம் மெல்ல மெல்ல சூடுபிடித்த நிலையில் அட்லெடிகோ மாட்ரிட் அணியும் தாக்குதலைத் தொடர்ந்தது. ஆனால், கோல் எதுவும் கிடைக்கவில்லை. முதல் பாதி 0-0 என முடிந்தது.

    இரண்டாவது பாதியிலும் கோல் கிடைக்கவில்லை. ஆட்டத்தில் கூடுதல் நேரமாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது. கோல் கிடைக்காத விரக்தி அட்லெடிகோ அணியினரிடம் மேலும் கோபத்தை கிளப்பி விட்டது. 

    அட்லெடிகோ அணியின் பெலிப்பே, மான்செஸ்டர் சிட்டி அணியின் பில் போடேனை தாக்கியதால் அவர் சுருண்டு விழுந்தார். அட்லெடிகோ அணியின் சாவிக் மேலும் அவரைத் தாக்க அந்த இடமே பதற்றத்துக்கு உள்ளாகியது. 

    நடவடிக்கை

    ஒரு சில கைகலப்புகளுக்குக்குப் பின் நிலைமையை சீராக்கிய களநடுவர்கள், அட்லெடிகோ அணியின் சாவிக் மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணியின்  போடேன் மற்றும் நாதன் ஏக் ஆகிய இருவருக்கும் சேர்த்து மஞ்சள் அட்டை கொடுத்தனர். அட்லெடிகோ மாட்ரிட் அணியின் பெலிப்பே சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு உடனடியாக ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். 

    இதுபோன்ற ஆட்டங்கள் கால்பந்து போட்டிகளுக்கு ஆரோக்கியமற்றது என்பதால் இதுகுறித்து மேலும் நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது யுஇஎப்ஏ கால்பந்து சம்மேளனம். அதுகுறித்த அறிக்கைக்காக காத்திருப்பதாக கூறியுள்ளது.

    கனடா நாட்டை மிரட்டிவரும் ஜாம்பி நோய்! மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளதா?

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....