Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசம அளவில் சாதக,பாதகங்களை உடைய இரு அணிகள் இன்று பலப்பரீட்சை! - ஐபிஎல் பார்வை!

    சம அளவில் சாதக,பாதகங்களை உடைய இரு அணிகள் இன்று பலப்பரீட்சை! – ஐபிஎல் பார்வை!

    இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவிருக்கின்றன.

    சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனால், இந்த மீட்சியில் தற்போது பின்னடைவு ஒன்று ஏற்பட அநேக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. ஆம்! சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்த வாஷிங்கடன் சுந்தர் இன்றையப் போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. 

    இது ஹைதராபாத் அணிக்கு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சற்று சறுக்கலாகவே  இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 7 ஆவது இடத்தில் களமிறங்கும் வாஷிங்கடன் சுந்தர் அவ்வபோது தனது பேட்டிங் திறமையை நிரூபித்து வந்த வண்ணமே உள்ளார். இந்நிலையில், வாஷிங்கடன் சுந்தர் இல்லாமை ஹைதராபாத் அணியை பாதிக்கும் என்றே தெரிகிறது. 

    மேலும், கேன் வில்லியம்சன் அணி வீரர்களை பக்குவப்படுத்தி வழிநடத்துவது தெளிவாய் தெரிகிறது. ஆரம்பத்தில் தொடர் தோல்விகளை சந்தித்துள்ளதால், ஹைதராபாத் அணிக்கு வெற்றிகள் அதிகம் தேவைப்படுகிறது.

    கடந்த போட்டிக்கும் அதற்கு முன்பு விளையாடிய போட்டிகளுக்கும் பல்வேறு வித்தியாசங்களை கொல்கத்தா அணியிடத்தில் காணமுடிகிறது. அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் வீரர்களை நிதானப்படுத்தியாக வேண்டும்.  உமேஷ் யாதவ் மற்றும் சுனில் நரைனை தவிர்த்து பந்துவீச்சில் மற்ற வீரர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பேட் கம்மின்ஸ் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினாலும், பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்கும் வள்ளலாகவே திகழ்ந்து வருகிறார்.

    பேட்டிங்கை பொறுத்தவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நிதிஷ் ராணா மற்றும் ரஹானே போன்றோர் ஃபார்முக்கு திரும்பாமல் இருப்பது கொல்கத்தா அணியை பலவீனமாக்குகிறது. 

    இரு அணிகளும் மோதிக்கொள்ளும் இப்போட்டியானது, மும்பையில் உள்ள பிரபார்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தை பொறுத்தவரையில் பந்துவீச்சை விடவும், பேட்டிங்கிற்குதான் அதிக ஒத்துழைப்பை நல்கிறது. 

    இதுவரை நேருக்கு நேர் இரு அணிகளும் விளையாடியதில், ஹைதராபாத் அணி 7 முறையும், கொல்கத்தா அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த இரு வருடங்களில் ஹைதராபாத் அணி, கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. அதே சமயம், புவனேஷ்குமார் கொல்கத்தாவிற்கு எதிராக இதுவரை 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

    இரு அணியின் பக்கமும் சம அளவில் சாதகங்களும் பாதகங்களும் இருக்க எந்த அணி வெல்லப்போகிறது என்பதை இன்று இரவு காண்போம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....