Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கனடா நாட்டை மிரட்டிவரும் ஜாம்பி நோய்! மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளதா?

    கனடா நாட்டை மிரட்டிவரும் ஜாம்பி நோய்! மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளதா?

    ஜாம்பி என்றதும் இது படத்தில் வரும் நோய் என்று நினைக்க வேண்டாம். நாம்  பல படங்களில் கண்டது இப்போது, நிஜத்தில் தலைவிரிக்கத் தொடங்கி இருக்கிறது. ஆம், ஜாம்பி நோய் கனடா நாட்டில் மான்களுக்கு பரவி வருகிறது. 

    கனடா நாட்டில் மான்கள் மற்றும் அதன் இன வகைகளுக்கு இந்நோய் பரவுகிறது என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

    அமெரிக்க நாட்டில் 1960 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோலாடோ, நெர்மெஸ்கா உள்ளிட்ட 26 மாகாணங்களில் பரவியுள்ளது. இருப்பினும் கனடாவில் 1996 ஆம் ஆண்டு இந்நோய் தொற்று முதல் முறையாக பரவியுள்ளது. 

    இந்த நோய்க்கு பெயர் cwd (chronic wasting disease) என்பதாகும். மேலும் இந்த நோயை ஜாம்பி என்று அழைக்க காரணம், மான்கள் தனது சுய கட்டுப்பாட்டை இழந்து செயல்படுவதால் இந்தப் பொது பெயரை சூட்டியுள்ளனர். 

    மான்கள் இந்நோய் பாதித்தற்கான அறிகுறிகள்: 

    மருத்துவர்கள் தெரிவித்த சில அறிகுறிகள்,

    • இந்நோய் பாதித்தால் மான்கள் வித்தியாசமான முறையில் நடத்துக் கொள்ளும். 
    • பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். மேலும் சிறுநீர் அதிகமாக வெளியேறும். 
    • விலங்குகளின் உடல் எடைக் குறைவு அதிகமாகும். 
    • இந்த உமிழ்நீர் மற்றும் சிறுநீர் மூலமாக நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். 

    மேலும் வேட்டையாட செல்பவர்கள் நோய் பாதிக்கப்பட்ட மானின் இறைச்சியை உண்பதால் அவர்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நோய் பாதிக்கப்பட்டு இறந்த மானினை சரியாக புதைக்க வேண்டும் என்றும் இதனை செய்வோர் கூடுதல் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 

    மனிதர்களுக்கு பரவுமா என்ற கேள்வி எழும் எனில், பரவ வாய்ப்புகள் உள்ளன என்றே மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதுவரை எந்த ஆராய்ச்சிகளும் நடத்தப்பட்டு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பாதுகாப்போடு இருப்பது நல்லது என்கின்றனர் மருத்துவக் குழுவினர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....