Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்ஆர்.எஸ்.எஸ் உடன் எங்களையும் ஒரே மாதிரியாக பாவிக்க கூடாது: தொல் .திருமாவளவன் வைத்த கோரிக்கை

    ஆர்.எஸ்.எஸ் உடன் எங்களையும் ஒரே மாதிரியாக பாவிக்க கூடாது: தொல் .திருமாவளவன் வைத்த கோரிக்கை

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட இருந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு காவல்துறை அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி மற்றும் விடுதலை சிறுத்தைகள்கட்சி சார்பில் நடைபெற இருந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக இருப்பதாக கூறி ,அந்த பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்தது.

    இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து நேற்று (செப் 30)வழக்கு விசாரணைக்கு வந்தது .அந்த வழக்கு விசாரணை தீர்ப்பில் உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் அக்டோபர் 2-ஆம் தேதிக்கு பதிலாக ,நவம்பர் 06-ஆம் தேதி தமிழகத்தில் பேரணியை நடத்திக்கொள்ளலாம் எனவும் ,அதற்கான அனுமதியை தமிழக காவல்துறை (அக்) 31-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது .

    இதையும் படிங்க: வெற்றி பெற்ற ஆர்.எஸ்.எஸ்…எச்சரிக்கப்பட்ட காவல்துறை..உயர்நீதிமன்ற தீர்ப்பால் சலசலப்பு..

    இந்த தீர்ப்பு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் , தமிழக காவல்துறையும் கோரிக்கை வைத்திருந்த நிலையில் ,இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் .திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் திரு பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

    மதவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் உடன் தங்களை ஒரே மாதிரியாக பாவிக்க முடியாது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.மேலும் இந்த வழக்கு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஆக்ரோஷ சிங்கத்திற்கு ‘கிரீன் சிக்னல்’ – தேசிய சின்ன மாறுபாடு வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....