Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஆக்ரோஷ சிங்கத்திற்கு 'கிரீன் சிக்னல்' - தேசிய சின்ன மாறுபாடு வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

    ஆக்ரோஷ சிங்கத்திற்கு ‘கிரீன் சிக்னல்’ – தேசிய சின்ன மாறுபாடு வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

    நாடாளுமன்ற தேசிய சின்னத்தில் உள்ள நான்முக சிங்க மாறுபாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தில் உச்சியில் 19.6 அடி உயரமும் 9,500 கிலோ எடையும் உள்ள வெண்கலத்தால் ஆன இந்திய அரசின் தேசிய சின்னமான நான்முக சிங்கத்தை மோடி கடந்த ஜூலை மாதம் திறந்து வைத்தார். 

    வழக்கமாக இந்தியாவின் தேசிய சின்னத்தில் இடம்பெற்றிருக்கும் சிங்கங்கள் அமைதியான முகத்துடன் இருக்கும், இந்நிலையில், பாஜக நமது தேசிய சின்னத்தை அவமதித்து விட்டதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் பாஜக அரசையும் பிரதமர் நரேந்திர மோடியையும் மிகக் கடுமையாக விமர்சித்தனர். நாட்டின் சின்னத்தையே மாற்றும் பாஜக அரசு நாளை எதை வேண்டுமானாலும் மாற்றும் என்றும் இது சர்வாதிகாரத்தனமான போக்கு என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

    நமது தேசிய சின்னமான அசோகரின் கம்பீரமான நான்கு சிங்கங்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. உண்மையான சிங்கள் அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கின்றன. நாடாளுமன்ற கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள சிங்கங்கள், உறுமிக்கொண்டு தேவையற்ற ஆக்ரோஷத்துடன் சரியான அளவில்லாமலும் இருக்கின்றன. அதனை உடனடியாக மாற்ற வேண்டும் என பலரும் வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் திறக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தின் வடிவமைப்பு தேசிய சட்ட விதிகளுக்கு எதிராக அமைந்துள்ளதாகவும், சாரநாத் அருங்காட்சியகத்தில் உள்ள நான்முக சிங்க சிலைக்கு முற்றிலும் எதிராக இருப்பதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம். ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி, மனுதாரர்கள் தேசிய அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், அவர்களது குற்றச்சாட்டினை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் திறக்கப்பட்ட நான்முக சிங்க தேசிய சின்னம் சட்ட விதிகளுக்கு எதிரானது இல்லை என்று திட்டவட்டமாக கூறிய நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    இதையும் படிங்க:68வது தேசிய திரைப்பட விருதுகள் – சூர்யா, ஜோதிகா உட்பட விழா மேடையை கலக்கிய கோலிவுட்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....