Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்68வது தேசிய திரைப்பட விருதுகள் - சூர்யா, ஜோதிகா உட்பட விழா மேடையை கலக்கிய கோலிவுட்

    68வது தேசிய திரைப்பட விருதுகள் – சூர்யா, ஜோதிகா உட்பட விழா மேடையை கலக்கிய கோலிவுட்

    68-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. 

    இந்திய திரையுலகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்திற்கான தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. அவற்றுள் 10 தேசிய விருதுகளை தமிழ் திரையுலகம் வென்றது. 

    இந்நிலையில், நேற்று 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தேர்வானவர்களுக்கு விருதுகளை வழங்கினார். 

    அந்த வகையில், தமிழ் கலைஞர்கள் சூர்யா, ஜி.வி.பிரகாஷ், அபர்ணா முரளி, ஜோதிகா, மடோனா அஸ்வின் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு விருதுகளை பெற்றனர். 

    தமிழ்த்திரையுலகம் பெற்ற விருதுகள் :

    சிறந்த திரைப்படம் – சூரரைப்போற்று 

    சிறந்த நடிகை – அபர்ணா முரளி – சூரரைப்போற்று 

    சிறந்த நடிகர் – சூர்யா ( சூரரைப்போற்று) மற்றும் அஜய் தேவ்கன் (தன்ஹாஜி)

    சிறந்த துணைநடிகை – லக்‌ஷ்மி பிரியா – சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.

    சிறந்த திரைக்கதை – சுதா கொங்கரா, ஷாலினி உஷா ஐயர் – சூரரைப்போற்று

    சிறந்த வசனம் – மடோனா அஷ்வின் – மண்டேலா 

    சிறந்த பின்னணி இசை – ஜீ.வி.பிரகாஷ்குமார் – சூரரைப்போற்று

    சிறந்த படத்தொகுப்பு – ஶ்ரீகர் பிரசாத் – சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் 

    சிறந்த தமிழ்த்திரைப்படம் – சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் 

    சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது – மடோனா அஷ்வின் – மண்டேலா

    இதையும் படிங்க: எங்கப்பா ஓடுது பொன்னியின் செல்வன் – கிரிக்கெட் வீரர் அஸ்வின் கேள்வி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....