Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகாதலியை திருமணம் செய்து வைத்த மனைவி; தொல்லை தாங்காமல் இருவருக்கும் 'டேக்கா' கொடுத்த கணவர்

    காதலியை திருமணம் செய்து வைத்த மனைவி; தொல்லை தாங்காமல் இருவருக்கும் ‘டேக்கா’ கொடுத்த கணவர்

    சமீபத்தில் ஆந்திராவில் மனைவியே தனது கணவனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

    ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கல்யாண். இவர் டிக்டாக்கில் பிரபலமானவர்.

    இவருக்கும் விமலா என்ற பெண்ணுக்கும் இடையே டிக் டாக் மூலம் தொடர்பு ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. பிறகு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து டிக் டாக் வீடியோக்கள் எடுத்து வெளியிட்டு வருகின்றனர். 

    இந்நிலையில், சில மாதங்களாக விமலா சோகமாக இருந்ததை கவனித்த கல்யாண், காரணத்தை விமலாவிடமே கேட்டுள்ளார். 

    கல்யாண் விமலாவை திருமணம் செய்வதற்கு முன்பாகவே நித்யாஸ்ரீ என்ற பெண்ணிடம், டிக் டாக் மூலமாக பேசி காதல் வயப்பட்டுள்ளார். பிறகு, சில நாட்களில் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: ‘ஐஸ்வர்யாராயை பார்த்து நான் பொறாமை படுகிறேன் ‘ பொன்னியின் செல்வன் குறித்து மீனா உருக்கம்!

    இதனையடுத்து, கல்யாணுக்கும் விமலாவுக்கும் இடையே திருமணம் நடந்துள்ளது. கல்யாணின் முன்னாள் காதலியான நித்யாஸ்ரீ என்ற பெண் இந்த விஷயங்களை விமலாவிடமே நேரடியாக வந்து கூறியுள்ளார். மேலும், கல்யாணை என்னால் மறக்க முடியவில்லை என கூறி விமலாவிடம் கதறி அழுதுள்ளார். 

    இதனால், மனமுடைந்த விமலா, நன்கு யோசித்து கல்யாணிடம் நித்யாவை திருமணம் செய்துகொள்ள விருப்பமா என கேட்டுள்ளார். அவரும் பழைய காதலியை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கூறவே விமலாவும் முழு மனதுடன், நித்யாவை தனது கணவருக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தார்.

    மேலும் மூவரும் ஒன்றாக வாழலாம் என்று பேசி ஒரு மனதாக முடிவெடுத்து, திருப்பதி கோவிலில் கணவர் கல்யாணுக்கு, நித்யாவை இரண்டாவதாக திருமணம் செய்து வைத்தார் விமலா. மூவரும் எடுத்துக் கொண்ட புகைபபடங்கள் வலைதளங்களில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டது.

    இந்நிலையில், கல்யாண் இரண்டு மனைவிகளை சமாளிக்க முடியாமல், வீட்டை விட்டு ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....