Saturday, March 16, 2024
மேலும்
    Homeஆன்மிகம்வடபழனி முருகன் கோயில் சக்தி கொலு; ஐந்தாம் நாள் கொண்டாட்டத்தில் உற்சாகமாக பங்கேற்ற பக்தர்கள்!

    வடபழனி முருகன் கோயில் சக்தி கொலு; ஐந்தாம் நாள் கொண்டாட்டத்தில் உற்சாகமாக பங்கேற்ற பக்தர்கள்!

    வடபழனி முருகன் கோயிலில் ‘சக்தி கொலு’ விழாவின் ஐந்தாம் நாளான நேற்று அம்பாள் கெஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

    சென்னை, வடபழனி முருகன் கோயிலில் நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், இந்தாண்டு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வடபழனி கோயிலில், ‘சக்தி கொலு’ என்ற பெயரில் பிரமாண்டமாக கொலு அமைக்கப்பட்டுள்ளது. 

    நவராத்திரி திருவிழாவின் ஒரு பகுதியாக ஒவ்வொரு நாளும் மாலையில் 108 பேர் கொண்ட குழுவால் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்யப்படுகிறது. 

    இதையும் படிங்க:பூமிக்கடியில் பெருங்கடல் இருப்பதை உறுதி செய்த விஞ்ஞானிகள் -மேற்பரப்பில் உள்ள கடல்களை விட 3 மடங்கு பெரியதாம் ..!

    கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு, வடபழனி முருகன் கோயிலில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். 

    vadapalani murugan temple

    இந்நிலையில், சக்தி கொலு விழாவின் 5 ஆம் நாளான நேற்று (செப்டம்பர் 30) அம்பாள் கெஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    முன்னதாக காலை, மாலை என இரு வேளைகளிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதன்பிறகு, பக்தர்களின் கொலு பாட்டு அரங்கேறியது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சக்தி கொலு விழாவைக் கண்டு களித்தனர்.

    vadapalani

    இதையும் படிங்க:காதலியை திருமணம் செய்து வைத்த மனைவி; தொல்லை தாங்காமல் இருவருக்கும் ‘டேக்கா’ கொடுத்த கணவர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....