Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்விளம்பரதாரர்களை மட்டுமே நம்பியிருக்க முடியாது : 'ப்ளூ டிக்கிற்கு' பணம் வசூலிப்பது குறித்து விளக்கமளித்த எலான்...

    விளம்பரதாரர்களை மட்டுமே நம்பியிருக்க முடியாது : ‘ப்ளூ டிக்கிற்கு’ பணம் வசூலிப்பது குறித்து விளக்கமளித்த எலான் மஸ்க்

    விளம்பரதாரர்களை மட்டுமே டுவிட்டர் முழுமையாக நம்பியிருக்க முடியாது என எலான் மஸ்க் தகவல் தெரிவித்துள்ளார்.

    எலான் மஸ்க் ட்விட்டரை தன் வசப்படுத்தியதும் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவும், இந்தியருமான பராக் அக்ரவால், தலைமை நிதித்துறை அதிகாரி நேத் சேகல், சட்டம் மற்றும் திட்டத்துறை தலைமை அதிகாரி விஜயா கட்டே மற்றும் முக்கிய உயர் அதிகாரிகளை பணியில் இருந்து அதிரடியாக நீக்கினார். 

    இதுமட்டுமல்லாது, இனி ட்விட்டரில் பல்வேறு மாறுபாடுகள் நிகழும் என தகவல்கள் வெளிவந்தன. இதைத்தொடர்ந்து, ட்விட்டரில் வேலை பார்க்கும் பணியாளர்களின் எண்ணிக்கையை 75 சதவீதம் அளவிற்கு குறைக்க திட்டம் திட்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    தற்போது ட்விட்டர் நிறுவனத்தில் சுமார் 7500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த எண்ணிக்கையானது சுமார் 2000-மாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ட்விட்டரின் வருவாயை இரட்டிப்பாக்கும் முயற்சியில் எலான் மஸ்க் ஈடுபடவுள்ளார். அவற்றின் ஒரு படியே இந்த ஆட்குறைப்பு என கூறப்படுகிறது.

    அத்துடன், ட்விட்டரில் அதிகார கணக்கு என்பதற்கான ப்ளு டிக்கிற்கு மாதந்தோறும் ரூ.1600 வசூலிக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    முன்னதாக,  ப்ளு டிக்கிற்கு மாதம் ரூ.400 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், மூன்று மடங்கு அதிகமாக இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் சர்ச்சைக்கும், கண்டனத்துக்கும் உள்ளானது. 

    இந்நிலையில், பிரபல நாவலாசிரியர் “ஒரு ப்ளூ டிக்கிற்கு 20 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டுமா?. நீங்கள் தான் எனக்கு பணம் தர வேண்டும்” என தெரிவித்து இருந்தார். இவரின் ட்விட்டிற்கு “நாங்களும் கட்டணம் (பில்) செலுத்த வேண்டும். விளம்பரதாரர்களை மட்டுமே டுவிட்டர் முழுமையாக நம்பியிருக்க முடியாது. 8 டாலர் என்றால் செலுத்துவீர்களா” என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    இதன்மூலம், ப்ளு டிக்கிற்கு கட்டணம் உயர்வது உறுதியாகிவிட்டது. ஆனால், எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறித்து மீண்டும் ஒரு அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: நாணயம், காகிதத்திற்கு ‘குட்பாய்’ இந்தியாவில் இன்று டிஜிட்டல் கரன்சி அறிமுகம்-ரிசர்வ் வங்கி தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....