Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்நாணயம், காகிதத்திற்கு 'குட்பாய்' இந்தியாவில் இன்று டிஜிட்டல் கரன்சி அறிமுகம்-ரிசர்வ் வங்கி தகவல்

    நாணயம், காகிதத்திற்கு ‘குட்பாய்’ இந்தியாவில் இன்று டிஜிட்டல் கரன்சி அறிமுகம்-ரிசர்வ் வங்கி தகவல்

    இந்திய ரிசர்வ் வங்கி இன்று முதல் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துகிறது. 

    ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் ரிசர்வ் வங்கி பல மாற்றங்களை கொண்டு வருவது வழக்கம். இதன்படி இந்திய ரிசர்வ் வங்கி முதலில் இந்த டிஜிட்டல் ரூபாயின் மொத்த விற்பனை பிரிவில் இதனை முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்துகிறது. 

    மேலும் ரிசர்வ் வங்கி அடுத்த மாதம் சில்லறை வர்த்தக பிரிவில் டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    முன்னதாக இந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இந்த நிதியாண்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    இந்த டிஜிட்டல் கரன்சி மூலம் பெரிய பண பரிமாற்றம் செய்துகொள்ள எளிதாக இருக்கும். மேலும், இந்த முறை அரசாங்க பத்திரங்களை வாங்குதல் மற்றும் விற்பது போன்ற செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும். 

    சமூக ஊடகங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டிஜிட்டல் கரன்சி வந்த பிறகும், தொடர்ந்து நோட்டுகளை அச்சடிக்கும் என தெளிவாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்கசென்னையில் இடைவிடாது கொட்டித்தீர்க்கும் கனமழை ! எங்கு அதிகபட்ச மழை பதிவு தெரியுமா ?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....