Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநடிகைகள் குறித்து தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி; 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு...

    நடிகைகள் குறித்து தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி; 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு காவல்துறை

    நடிகைகள் குறித்து தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி மீது 5 பிரிவுகளின் கீழ், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

    சென்னை, ஆர்.கே. நகர் பகுதியில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சைதை சாதிக் என்பவர், பாஜகவைச் சேர்ந்த குஷ்பு சுந்தர், நமீதா, காயத்திரி ரகுராம், கௌதமி ஆகியோர் குறித்து சர்ச்சரிக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படுகிறது. 

    பிறகு, சமூக வலைத்தளமான ட்விட்டரில் நடிகை குஷ்பு வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு, அந்தப் பதிவிலேயே திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி  மன்னிப்பு கேட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, பாஜக மகளிர் அணி தரப்பில் இருந்து சைதை சாதிக் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தனர். 

    இந்நிலையில் நடிகைகள் மற்றும் பெண்களை இழிவாக பேசிய திமுக நிர்வாகியான சைதை சாதிக் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

    இதன்படி, கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், குறிப்பிட்ட சமுதய மக்களை தரக்குறைவாக பேசுதல், பெண்ணின் மானத்திற்கு பங்கம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: நடிகைகள் குறித்து சர்ச்சை பேச்சு : தி.மு.க. பேச்சாளர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....