Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமோர்பி பால விபத்து: நேரில் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி..!

    மோர்பி பால விபத்து: நேரில் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி..!

    மோர்பி பால விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனை சென்று பிரதமர் மோடி சந்தித்தார். 

    குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் -30) மக்கள் கூட்டம் அலை மோதியது. தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகளவில் மக்கள் பாலத்துக்கு வந்திருந்தனர். அப்போது பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல், அந்தப் பாலம் மாலை 6.30 மணியளவில் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவர்கள் நதியில் விழுந்தனர். 

    இதனையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் நதியில் மூழ்கியவர்களில் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 140-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், தற்போது விபத்து ஏற்பட்ட பகுதியையும், விபத்தில் காயமடைந்தவர்களையும் சந்திக்க பிரதமர் மோடி குஜராத் சென்றுள்ளார். முன்னதாகவே, மோடி வருகை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, தனிவிமானம் மூலமாக பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தின் மோர்பி பகுதிக்கு சென்றார். பின்பு, குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் மற்றும் பிரதமர் மோடி இருவரும் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தனர். அப்பகுதியில் சிறிது நேரம் பிரதமர் மோடி ஆய்வை மேற்கொண்டார். இதன்பிறகு, மோர்பி மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர்களை சந்தித்து ஆறுதல் அளித்தார்.

    இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி குஜராத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த அடல் பாலத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இப்பாலத்தில் ஒரு மணி நேரத்திற்கு மூவாயிரம் நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: “கொலைக்கு எத்தனை வருடம் தண்டனை”: கூகுளில் தேடிய பிறகே காதலனை கொலை செய்ய திட்டமிட்டரா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....